
மகா கும்பமேளா 144 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. உலகத்திலேயே மிகப்பெரிய விழாவாகவும், உலகில் உள்ள மக்கள் ஒன்றாகக் கூடும் விழாவாகவும் UNESCO ஆல் அங்கிகரிக்கப்பட்ட விழாதான் உத்ரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ்ஜில் நடைப்பெறும் மகா கும்பமேளாவாகும். கும்பமேளாவில் நான்கு வகைகள் உள்ளன.
ஆர்த் கும்பமேளா ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும், பூர்ண கும்பமேளா 12 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும், மகா கும்பமேளா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இதுவே, 144 வருடங்ளுக்கு ஒருமுறை நடைபெறுவதுதான் மகா கும்பமேளா. 12 பூர்ண கும்பமேளாவிற்கு பிறகு நடத்தப்படுவதுதான் மகா கும்பமேளாவாகும். இது பிரயாக்ராஜ்ஜில் மட்டுமே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகர சங்கராந்தி தொடங்கி மகா சிவராத்திரி வரையிலான 44 நாட்கள் மட்டுமே மகாகும்பமேளா நடைபெறும். நவகிரகங்களில் சில குறிப்பிட்ட நட்சத்திரங்களும், கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் இணையும் நாளிலேயே மகா கும்பமேளா நடைபெறும். அப்படியொரு அற்புதமான நாள் இந்த ஆண்டில் வர உள்ளது.
ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 26 வரையில் நடைப்பெறும் மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் இணையும் திரிவேணி சங்கமத்தில் நீராடினால், அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கும்பமேளா நடைபெறுவதற்கான காரணம் தெரியுமா? அமிர்தத்தை பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பார்க்கடலை கடைந்தபோது பல்வேறு தெய்வீகத்தன்மை கொண்ட பொருட்கள் அதிலிருந்து வெளிவந்தது. கடைசியாக, அமிர்தமும் வெளிவந்தது. அது அசுரர்களுக்கு கிடைக்கக்கூடாது என்று மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் இருக்கும் கும்பத்தை எடுத்துச் சென்றார். அப்போது அமிர்தத்தில் இருந்து சில துளிகள் பூமியில் சிந்தியது. அது விழுந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜயினி, காசி ஆகிய புனித நகரங்கள் தோன்றியது. இதன் நினைவாக கொண்டாடப்படுவதே கும்பமேளாவாகும்.
கும்பமேளா அன்று திருவேணி சங்கமத்தில் நீராடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜனவரி 13 ஆம் தேதி பௌர்ணமி ஸ்நானத்துடன் தொடங்குகிறது மகா கும்பமேளா. ஜனவரி 15 ஆம் தேதி மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 23 ஆம் தேதி அமாவாசை ஸ்நானம். பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம். பிப்ரவரி 12 மகி பௌர்ணமி ஸ்நானம். பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி ஸ்நானத்துடன் மகா கும்பமேளா இந்த ஆண்டு இனிதே நிறைவடைய உள்ளது.