ஆன்மீகக் கதை: ஒரு வார்த்தையால் மாறிய கும்பகர்ணனின் விதி!

வைகுண்ட வாசல் காவலனாக இருந்தவன் அசுரனாகப் பிறந்து, தர்மமுள்ள இதயத்துடன் ராவணனுக்காக போரில் உயிர்நீத்த கும்பகர்ணனின் சாபம், வரம், வீரமரணம் இணைந்த அதிசயக் கதை!
Saraswati Devi - Kumbhakarna
Saraswati Devi - KumbhakarnaImage credit: AI
Updated on
Deepam strip
Deepam strip

கும்பகர்ணன் ராமாயண காலத்தில் விஸ்ரவஸுக்கும், கைகசிக்கும் மகனாக ராவணனின் தம்பியாக பிறந்தவன். கும்பகர்ணன் ஆறு மாத தூக்கமும் ஆறு மாத விழிப்பும் என்று வாழ்ந்தவன். கும்பகர்ணன் ஏன் இவ்வாறு வாழ்ந்தார் என்பது பலருக்கும் தெரியாத கதை.

கும்பகர்ணன் முற்பிறவியில் விஷ்ணுவின் வாயில் காப்பாளராக வைகுண்டத்தில் இருந்தவர். அவர் பெற்ற சாபத்தின் காரணமாக அசுரராக பிறந்தார். இருப்பினும் கும்பகர்ணன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவனுடைய தவம் பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டே சென்றது.

கும்பகர்ணன் 800 அடி உயர பிரம்மாண்ட உருவம் கொண்டவன் பலத்திலும் உருவத்திலும் பெரியவனாக ராவணனுக்கு இணையானவனாக வாழ்ந்தான். தேவர்கள் கும்பகர்ணனின் கடும் தவத்தை கண்டு அஞ்சினர். இராவணனுக்கு இணையான பலவானாக இருந்தும் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் ஏதேனும் வரம் பெற்று விட்டான்.

தேவர்கள் அவர்களுக்கு கும்பகர்ணனால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று நினைத்து சரஸ்வதி தேவியிடம் உதவி கோரினர். சரஸ்வதி தேவியும் தேவர்களின் ஆணைக்கிணங்க கும்பகர்ணனின் வரத்தை மாற்றினார்.

ஒருநாள் பிரம்மா கும்பகர்ணனின் தவத்திற்கு இணங்க அவருக்கு காட்சியளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது கும்பகர்ணன் வரம் கேட்கும்பொழுது கும்பகர்ணனின் நாவில் சரஸ்வதி தேவி அமர்ந்து கும்பகர்ணன் கேட்க நினைக்கும் நித்தியதுவம் (அழியாத வாழ்வு வேண்டும்) என்ற வரத்தை கேட்பதற்கு பதிலாக நித்திரத்துவம் (ஆழ்ந்த உறக்கம் வேண்டும்) என்று கேட்கச் செய்தார். இதனால் பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் என்று வரம் அளித்தார். பின் நடந்ததை அறிந்த கும்பகர்ணன் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு தூங்கிக் கொண்டே இருப்பது என்று பிரம்மாவிடம் மன்றாடினார். இருப்பினும் பிரம்மா அளித்த வரத்தை திரும்ப பெற இயலாது. அதனால் நீ ஆறு மாத தூக்கம் ஆறு மாத விழிப்பு என்று மாற்றித் தந்தார். இந்த காரணத்தினால் கும்பகர்ணன் ஆறு மாதம் விழித்தும் ஆறு மாதம் தூங்கியும் இருப்பார்.

இந்த வரத்தின் காரணமாக உலகையே அதிரசெய்ய வேண்டிய அந்த 800 அடி உயர அரக்கன் ஆறு மாதங்கள் தூங்குமூஞ்சியாக இருந்தான். கும்பகர்ணன் குளிக்க கடலுக்கு சென்றாலும் முட்டி அளவு தண்ணியே இருக்கும். இதனால் அவன் ஆகாய கங்கையை கிழித்து அதிலிருந்து வரும் நீரில் குளிப்பான். இதே கிருபானந்த வாரியார் நகைச்சுவையாக உலகின் முதல் ஷவர் பாத் எடுத்த மனிதன் என்று அழைத்தார் .

இதையும் படியுங்கள்:
ராமன் ஏன் வென்றான்? மண்டோதரி தந்த விளக்கம்!
Saraswati Devi - Kumbhakarna

கும்பகர்ணன் அரக்கனாக இருந்த போதிலும் அவனது மனம் தர்மத்தால் நிறைந்து இருந்தது. ராவணன் சீதையை கவர்ந்து வந்த போது அவன் சீதையை கணவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணனிடம் மன்றாடினார். இருப்பினும் கேட்காத காரணத்தினால் ராவணனுக்காக போரில் நின்று வீரமரணம் அடைந்தார்.

கும்பகர்ணனின் மனம் தர்மத்தால் நிறைந்திருந்தாலும் அவனுக்கு கிடைத்தது அநியாயமே. அவன் கடும் தவம் புரிந்து வரம் கேட்கும்போதும் சரஸ்வதி தேவியால் நித்தியத்துவம் என்று கேட்பதற்கு பதிலாக நித்திரத்துவம் என்று கேட்டு ஆறு மாத உறக்கத்தை அனுபவித்தான். ராவணனின் அதர்மச் செய்கையால் செஞ்சோற்றுக் கடன் தீர்க்கப் ராவணனுக்காக போரில் நின்று வீரமரணம் அடைந்தான்.

logo
Kalki Online
kalkionline.com