அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரக சன்னிதி இடம்பெற்றிருக்கும். நவக்கிரங்கள் இல்லாத பிரசித்தி பெற்ற பல சிவாலயங்களும் இருக்கின்றன. அவை எமன் வழிபட்ட சிவாலயங்களாக இருந்தால் அங்கு நவக்கிரகங்கள் இருக்க வாய்ப்பில்லை.
சென்னை :
சென்னை அடுத்துள்ள திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நவக்கிரகம் இல்லை. அது எமன் வந்து வழிபட்ட தலம். ஆதலால் இங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.
திருநள்ளாறு :
புதுச்சேரி அருகில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நவக்கிரக சன்னதி இல்லை. இங்கு எமன் வழிபட்டதால் சன்னிதி இல்லை என கூறப்படுகிறது
திருவாவடுதுறை :
நாகப்பட்டினம் அருகில் உள்ள திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் ஆலயத்திலும் எமன் வழிபட்டு உள்ள காரணத்தால் இங்கும் நவக்கிரக சன்னிதிகள் இல்லை.
ஸ்ரீ வாஞ்சியம் :
திருவாரூர் ஶ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர்கோவிலில் எமதர்மனுக்கு முக்கியத்துவம் உள்ளதால் இங்கு நவகிரகங்கள் இல்லை.
திருக்கடையூர் :
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் எமனுக்கு, மானிடர்களின் உயிரை எடுக்கும் அதிகாரம் சிவன் வழங்கியதாக ஐதீகம். அதனால் இங்கு நவக்கிரகங்கள் இல்லை.
திருமழப்பாடி :
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள திருமழப்பாடி வைத்தியநாதர் திருத்தலத்திலும் நவக்கிரகம் இல்லை.
திருப்பைஞ்சீலி :
திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பைஞ்ஞீலி தலம் வாழை மரத்தை தலவிருட்சமாக கொண்ட சிவத்தலம். இங்கும் நவக்கிரக சன்னிதி கிடையாது.
திருவெண்காடு :
நாகப்பட்டினம் மாவட்டம் அருகில் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் தலத்தில் நடராஜர், சிதம்பரத்தில் உள்ள நடராஜரை விட பழமையானவர். இங்கும் நவக்கிரக சன்னிதி கிடையாது.
திருப்புறம்பியம் :
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் திருப்புறம்பியம் சாட்சிநாதர் தலத்திலும் நவக்கிரங்களுக்கு சன்னிதி இல்லை.
இந்த அனைத்து சிவன் கோவில்களிலும் எமன் வழிபட்ட தலமாததால் நவக்கிரக சன்னிதிகள் இல்லை.