ஒரு சந்தன பொட்டிற்குப் பின்னால் இத்தனை அறிவியலா?

ஒரு சந்தன பொட்டிற்குப் பின்னால் இத்தனை அறிவியலா?

யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதற்காக மாலை அணிந்தஉடன் புருவம் மத்தியில் சந்தனத்தை வைத்துக் கொள்ள வேண்டும். சந்தனத்தை நெற்றியில் பார்த்ததுமே இவர் மாலை அணிந்த சாமி என்று மற்ற ஐயப்ப சாமிகள் தெரிந்துகொள்வார்கள்.

சந்தன பொட்டில் இருக்கும் அறிவியல்பூர்வமான காரணங்களை உணர்ந்தும் ஆன்மிக சிந்தனையுடனும் இதை அணிந்துகொள்வதால் பல அற்புதமான மாற்றங்கள் உங்களுக்குள் நிகழும்.  நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தில் பிட்யூட்டரி எனும் சுரப்பி  உள்ளது. சுரப்பியின் அமைப்பு ஒரு கண்ணைப்போன்றே இருக்கும் என்பது தெரியுமா?

* ந்தனம் மூளைச்சோர்வை நீக்குகின்றது. சந்தனத்தை இரு புருவங்களுக்கும் இடையே இடுகின்றபோது மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களை பதிவு செய்துவைத்திருக்கும் மூளை பின்புற மேடு என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு உதவுகிறது.

* நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள நெற்றி பொட்டிலே பட்டும் படாமல் சுண்டு விரலை நேராக பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்தால் மன உறுதிப்பாடு தோன்றும். சிந்தனை தெளிவு பெறும். எதையும் தெளிவாக புரிந்துகொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றி பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க சந்தனம் சரியான மருந்து..

* ன்று பலருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது உடல் உஷ்ணம். இதன் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்படுகின்றனர். இவர்கள் தினமும் நெற்றியில் சந்தனத்தை குழைத்து இட்டுக்கொள்ள வேண்டும்.

* ண்கள் மட்டுமல்ல பெண்களும் நெற்றியில் குங்குமத்துடன்  சந்தனத்தையும் வைத்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
எந்த நேரத்தில் யோகா செய்வது நல்லது?
ஒரு சந்தன பொட்டிற்குப் பின்னால் இத்தனை அறிவியலா?

* ந்தனத்தை நெற்றியில் வைத்துக்கொள்வதால் மனம் ஒருமைப்படுகிறது. உங்களுக்கு தெரியாத ஒரு உணர்வு வெளிப்படும். மனம் சாந்தபடும். இந்த நிலையில் நீங்கள் தியானம் செய்ய ஆரம்பித்தால் எதையும் சிந்திக்காமல் மன ஒருமைப்பாட்டுடன் தியானம் செய்ய முடியும். சிந்தனை நரம்புகளுடைய முடிச்சு இதை இட்டுக் கொள்ளும் இடத்தில்தான் இருக்கும். தலைவலி, தலைபாரம் தீர்ந்து மன உளைச்சல் நீங்கும் புது தெளிவு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.

* ந்தனத்தை நெற்றியில் இட்டுக்கொண்டால் நம்முடைய மூளை எதிர்மறை எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளாது. மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தில் இந்த சந்தனத்திற்கு முன்னுரிமை உண்டு. கோயில்களிலும் சந்தனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

* சந்தனம்
* சந்தனம்

* ந்தனம் இருக்கும் இடமெல்லாம் நேர்மறை ஆற்றல் நிறைவாக இருக்கும். இந்த சந்தனத்தை நீங்கள் நெற்றியில் வைத்துவிட்டீர்கள் என்றால், உங்களை சுற்றி நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், உங்களிடம் இருக்கும் அந்த பாசிட்டிவ் எனர்ஜி உங்களை சுற்றி உள்ள இருப்பவர்களையும் போய்சேரும். அந்த அளவிற்கு நேர்மறை ஆற்றலை பரப்பக்கூடிய சக்தி இந்த சந்தனத்திற்கு உண்டு. குறிப்பாக இந்த சந்தனத்தை மோதிர விரலால் தொட்டு நம்முடைய நெற்றியில் இட்டுக் கொள்ளும்போது நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய சக்கரங்கள் சீராக செயல்பட தொடங்குகின்றன.

* பொதுவாக எந்த ஒரு எதிர்மறையாற்றல் நம் உடம்பில் ஓடுவதாக இருந்தாலும் அது நம் நெற்றி பொட்டின் வழியாகத்தான் நம் உடம்புக்குள் செல்லும். நம் உடம்பில் அந்த நெற்றிப்பொட்டை பாதுகாக்கும் சந்தனத்தை எப்போதும் நெற்றியில் இட்டுக்கொண்டே இருந்தால் உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com