தென்னக அயோத்தி - பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர் - கும்பகோணம் ராமசாமி கோவில்!

பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர்...
பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர்...

யோத்தியில் உள்ளது போல, லக்ஷ்மணன், சத்துருக்கனர், பரதர் சூழ, ராமர் ஒரே ஆசனத்தில் சீதையுடன் காட்சியளிக்கும் கோவில் இது.

தென்னக அயோத்தி என சிறப்பு பெற்ற ராமசாமி கோவில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. 

கோயில் நகரமாம் குடந்தையில் அமைந்துள்ள இக் கோவிலில் உள்ள ராமர் சிலை உலகில் வேறு எங்குமே இல்லாத வகையில் பலவகையான சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

வட அயோத்திக்கு போக முடியாதவர்கள் இக்கோவிலை சென்று தரிசிக்கலாம். ராமருக்கு பல கோவில்கள் உலகெங்கும் உள்ளன. காசிக்கு நிகரான புனிதமும், அயோத்திக்கு நிகரான சிறப்பும் கொண்ட கலையும், ஆன்மீகமும் செழித்திருக்கும் கோவில் இது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தசரத மகா சக்கரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் ஒரே இடத்தில் அற்புதமாக காட்சி தருகின்றனர். அதேபோன்று கும்பகோணத்தில் அமைந்துள்ள ராமசாமி கோவிலிலும் நான்கு சகோதரர்களும் சீதை மற்றும் கையில் வீணை ஏந்திய ஆஞ்சநேயருடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இ‌‌க்கோவில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ரகுநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. இவருக்கு ராம சரிதம் கேட்பதிலும் படிப்பதிலும் பேரார்வம் இருந்தது. தினமும் தன் அரசவையில் ராமாயணத்தை படிக்கச் சொல்வாராம். பண்டிதர்கள் அந்த ராமாயண புண்ணிய கதையே சொல்லும் போது மெய்சிலிர்த்து கேட்பாராம்..அத்தகைய சிறந்த பக்தி மிக்க ரகுநாத நாயக்கர் கட்டிய கோவில்தான் குடந்தை ராமசாமி கோவில்.

குடந்தைக்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது ராமபிரான் சீதா தேவியின் மூர்த்தங்கள் கிடைத்ததாகவும், அதைக் கண்டு மகிழ்ந்த ரகுநாத நாயக்க மன்னர் குடந்தையில் கோவில் எழுப்பி இந்த மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்ததாகவும் தல வரலாறு கூறுகிறது.

ராமரும் சீதையும் ஒரே ஆசனத்தில் அருகருகே அமர்ந்து காட்சி தருகின்றனர். வில்லை ஏந்தியபடி லட்சுமணனும், இடதுபுறம் சாமரம் வீசிய நிலையில் சத்ருக்கனனும், வலது புறம் குடை பிடித்தவாறு பரதனும் காட்சி தருகின்றனர்.

இங்குள்ள அனுமான் ஒரு கையில் வீணையும் மற்றொரு கையில் ராமாயண புத்தகமும் கொண்டு வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் சிறப்பாக வீற்றிருக்கிறார். 

இதையும் படியுங்கள்:
காரில் பயணமா? சோர்வு இல்லாத பயணத்திற்கான சில டிப்ஸ்!
பட்டாபிஷேக கோலத்தில் ஸ்ரீராமர்...

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவிலாகும். கோவிலில் ஆங்காங்கே நாயக்கர் கால சிற்பங்கள் வெகு அழகுடன் செதுக்கப்பட்டுள்ளன. 

கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதும் மூலிகை வண்ணங்களால் ராமாயணத்தின் எல்லா காண்டங்களும் சிறப்பான ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. 

ராமனின் இந்த பட்டாபிஷேக காட்சியைக் காண கண் கோடி வேண்டும். இங்கு ஸ்ரீராம நவமி வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com