கோடை விடுமுறை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் குறைப்பு!

கோடை விடுமுறை முன்னிட்டு திருப்பதியில் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் குறைப்பு!

திருப்பதி வந்தால் வாழ்க்கையில் திருப்பம் உண்டாகும் என்ற நம்பிக்கையின்படி தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்ய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தருகிறார்கள்.

கோடைகாலம் துவங்கி இருக்கும் நிலையில் தற்போது பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக அதிக அளவில் திருப்பதி மலைக்கு வர துவங்கி உள்ளனர். அப்படி வரும் பக்தர்கள் ஏழுமலையானை விரைவில் வழிபட வசதியாக சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு டிக்கெட்டுகள் 60% அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மிக முக்கிய பக்தர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி தற்போது வழங்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது நாள் ஒன்றுக்கு கூடுதலாக சுமார் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் நேரடியாக விற்பனை செய்து வருகிறது.இது தவிர தமிழ்நாடு, பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கும் இந்திய சுற்றுலா துறைக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னுரிமை அடிப்படையில் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை ஒதுக்கீடு செய்து வருகிறது.

மேலும் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. அதுபோலவே முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் விஐபி பிரேக் தரிசனம் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய மற்றும் மிக முக்கிய பக்தர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு விஐபி பிரேக் தரிசன வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு அனுப்பி வைக்கப்படும் பரிந்துரை கடிதங்கள் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை ஏற்று கொள்ளப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால் சாதாரண பக்தர்களுக்கு சாமி கும்பிட முன்னுரிமை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்றும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com