ஆன்மிகக் கதை - செவிட்டு சாமியின் சிவபக்தி!

சண்டிகேஸ்வரர்...
சண்டிகேஸ்வரர்...

வ்வொரு சிவாலயத்திலும் வடக்குப் பிராகாரத்தில் தென் திசையை நோக்கி, சண்டேஸ்வரர்' எனப்படும் சண்டிகேஸ்வரருக்கு திருச்சன்னிதி அமைந்திருக்கும். சண்டிகேஸ்வரரை, 'செவிட்டு சாமி' என்றழைத்து பக்தர்கள் கைகளால் ஓசை எழுப்பி வணங்குவார்கள். உண்மையில், சண்டேஸ்வரரின் வரலாறு அப்படியல்ல. இவரது உண்மைப் பெயர் விசாரசர்மர். இவரது உள்ளம் மற்றும் உணர்வு அனைத்தும் சிவமயமே. இதனால் இவரை, 'சிவ பித்தன்' என்று கூறி,  ஊரார் கேலி செய்வர். ஆனாலும், விசாரசர்மரின் சிவ யோக பக்தி நாளுக்கு நாள் அதிகமாயிற்று. இம்மஹான் தினசரி ஆற்றங்கரை மண்ணையே சிவலிங்கமாகப் பிடித்து, அதற்கு குடம் குடமாகப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார்.

நாளடைவில், பசுக்கள் விசாரசர்மாவை வந்தடைந்து தாமாகவே அவருக்குப் பாலைப் பொழிந்து தந்தன. இதைக் கண்ட ஊரிலுள்ளோர், விசாரசர்மரின் தந்தையிடம் முறையிட்டனர். மகனின் செயலைக் கேள்வியுற்ற தந்தை, கோபமுற்று விசாரசர்மரை ஒரு கோலால் நையப் புடைத்துத் தண்டிக்கலானார்.

ஆனால் விசாரசர்மரோ, தந்தையின் தடியடியைச் சிறிதும் பாராட்டாமலும், வேதனைப்படாமலும் சிவயோகத்திலேயே ஆழ்ந்திருந்தார். அச்சமயம் ஈசனின் அபிஷேகத்துக்காக வைக்கப்பட்டிருந்த பால், அவரது தந்தையின் கால் இடறி முழுவதும் வீணாகியது. இந்நிலையில் சிவயோகத்திலிருந்து கண் விழித்த விசாரசர்மர், தந்தை யென்றும் பாராமல் ஒரு குச்சியை எடுத்து தந்தையின் காலை நோக்கியவுடன், அக்குச்சி ஒரு மழுவாக மாறி விசாரசர்மர் தந்தையின் காலைத் துண்டித்தது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் நாம் கண்டும் காணாமல் போக வேண்டிய இரண்டு வகை மக்கள்!
சண்டிகேஸ்வரர்...

அந்நேரம், விசாரசர்மரின் பக்தி யோகத்தைக் கண்டு, உமாமஹேஸ்வரர் அங்கே பிரத்யக்ஷமாகி தமது கைகளால் அவரை ஸ்பரிசித்தார். அதோடு, தமது சடையில் அணிந்திருந்த கொன்றை மாலையைப் பக்தனுக்குச் சூட்டி அருளியதோடு,  தமது தலங்களிலேயே பக்தி செய்ய அவருக்கு நிரந்தர இடமும் கொடுத்தார். விசாரசர்மர் தந்தையின் காலையும் முன்போலவே இருக்க அருளினார். சண்டேஸ்வரர் எப்பொழுதும் சிவயோக பக்தியில் திளைத்திருப்பதால் பக்தர்கள் கை ஓசையை எழுப்பி அவரை வணங்குகின்றனர்.

- காரை சங்கரா

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com