ஆன்மீக கதை: கள்வர்களின் தலைவன் சிவபெருமானா?
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 32 ஆவது குரு ஸ்ரீநரஸிம்ம பாரதி சுவாமிகள் தம் பல்லக்கில் பூனாவுக்கு அருகில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பரிவாரங்களும் சென்று கொண்டிருந்தன.
அடர்ந்த காடு. அந்தி மங்கியது. மாலையில் ஸ்ரீசந்திரமௌலீசுவர பூஜை செய்ய வேண்டும். தெளிந்த நீருள்ள ஓர் ஓடையைக் கண்டதும் சுவாமிகள், ‘நிறுத்துங்கள்’ என்று உத்தரவிட்டு அங்கேக் குளித்து, தன் வழக்கமானக் கடமைகளைச் செய்து முடித்தார்.
பூஜைக்காக வெள்ளிப் பாத்திரங்கள் பெட்டிகளிலிருந்து எடுத்துப் பரப்பப்பட்டன. தீவட்டிகளின் ஒளியில், அபிஷேக, நைவேத்திய, தீப ஆரத்திகளுடன் சிவபூஜை சிறப்பாக நடந்தது.
விபூதி, ருத்ராட்சங்களுடன் சுவாமிகள் கயிலைநாதனைப் போலவே காட்சியளித்தார்.
பூஜை முடிந்தவுடன் ஸ்ரீசந்திரமௌலீசுவர லிங்கமும் ரத்னகர்ப்ப கணபதியும் பத்திரம் செய்யப்பட்டன. நகைகளையும் வெள்ளிப் பாத்திரங்களையும் எடுத்து வைக்கத் தொடங்குகையில் ஓர் உரத்த குரல் கேட்டது: