63 நாயன்மார்களில் ஒருவராக வணங்கப்படும் கண்ணப்ப நாயனருக்கு சிவபெருமான் அருளிய இடம் எங்கே இருக்கிறது தெரியுமா? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நாதன், தத்தை என்ற வேடுவத் தம்பதியினர் காட்டில் வசித்து வந்தனர். அரக்கோணம் குண்டக்கல் ரயில் மார்க்கத்தில் உள்ள உடுக்கூர் அப்போது காடாக இருந்தது. அங்கே இருந்த இந்த வேடுவத் தம்பதிக்கு மகன் பிறக்க, திண்ணன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். உரிய பருவத்தில் வில்வித்தை, வாள் சண்டை, ஈட்டி, வேல் எறிதல் அனைத்தையும் கற்பித்து வளர்க்கின்றனர்.
திண்ணன் இங்ஙனம் வேடுவ குலத்தில் பிறந்ததற்குப் பின்னால் இன்னொரு வரலாறும் இருக்கிறது.