

தெய்வம் எங்குள்ளது? சாஸ்திரங்கள் சொல்வதென்ன?
ஒரு பிரம்மசாரிக்கு இருபது அடி தூரத்தில் தெய்வம் உள்ளது என்று தெரிவிக்கின்றன.
ஏனெனில் இளமைப்பருவத்தில் சிக்குண்ட ஒருவனுக்கு தெய்வீகத்தை உணர்தல் முடியாது. அவன் தனது மன ஆற்றலையும் தனது வலுவான தசை பலத்தையும், இதய வலிமையையும் நம்பிக் கொண்டிருக்கிறான். தர்மம் அல்லது இறைவன் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே எவன் ஒருவன் தர்மத்திலிருந்து தூரத்தில் இருக்கிறானோ அவன் இறைவனிடமிருந்தும் தூரத்தில் இருக்கிறான்.
ஒரு சந்யாசிக்கு தெய்வம் மூன்று அடி தூரத்தில் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
காவி உடை உடுத்தி மொட்டை அடித்துக் கொண்டால் மட்டும் ஒருவன் துறவியாகி விட முடியாது. அவன் உடல் சார்ந்த பற்று அனைத்தையும் துறக்க வேண்டும். உலோகாயத ஆசைகளைத் துறக்க வேண்டும். சந்யாசியாக ஒருவன் இருந்தாலும் உடலைப் பற்றிய சில மாயை இன்னும் அவனிடம் இருப்பதால் அவனுக்கு மூன்று அடி தூரத்தில் தெய்வம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
கிருஹஸ்தன் எனப்படும் இல்லறத்தானிடம் மட்டுமே கடவுள் அவன் இதயத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அவன் இதயத்தில் கடவுள் இருந்தாலும் கூட பேராசை, த்வேஷம், பொறாமை போன்ற தீயகுணங்களை அவன் விட்டொழித்தாலொழிய அவன் முன்னே இறைவன் காட்சி அளிக்க மாட்டான். அகங்காரமும் பற்றும் அவனைக் குருடாக்கி விடும்.
தெய்வத்தின் கருணையைப் பெற அறிவையோ, செல்வத்தையோ, அதிகாரத்தையோ அந்தஸ்தையோ பெற வேண்டிய அவசியமில்லை. தூய்மையான உள்ளம் ஒன்று மட்டுமே போதும்.
தூய்மையான ஒருமுனைப்பட்ட கவனத்துடன் இறைவனை வழிபடும் போது ஒருவனின் உடலில் உள்ள ஒவ்வொரு திசுவும் தெய்வீகத்தால் நிரம்பி இருக்கும். தன்னை தியாகம் செய்யும் ஒரு பக்தனிடம் தெய்வீகம் எங்கும் பரவி உள்ளதாக இருக்கும்.
பக்தர்களின் பிரார்த்தனைக்குச் செவி மடுக்க ஆண்டவன் எப்போதுமே தயாராக இருக்கிறான்.
ஆனால் Devotion – பக்தி என்பது இன்றைய உலகில் Deep Ocean – உலோகாயத சமுத்திரமாக மட்டுமே இருக்கிறது.
Divine – தெய்வீகம் பற்றிப் பேசுவோர் இன்று Deep Wine ஒயினில் மட்டுமே ஆவல் கொண்டிருக்கிறார்கள்.
Compassion - தயை பற்றிப் பேசுவோர் இன்று Fashion -நவ நாகரீகத்தில் மட்டுமே கருத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
Co-operation என்று வாயால் பேசுகிறார்கள். ஆனால் Operationல் -தீவிரச் செயலில் மட்டுமே முனைப்புக் காட்டுகிறார்கள்.
Devotion பக்தி என்பது Pompus show வெறும் பகட்டு வேஷம் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டு விட்டது.
உண்மையான ஞானம் என்பது ஒருவன் அதீதமான ஒழுக்க நெருக்கடியில் சிக்கும் போதுதான் அவனுக்கு ஏற்படும்.
ஒவ்வொரு விநாடியும் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய கணம் தான்! புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ஒரு ஆண்டு முழுவதும் காத்திருந்து புத்தாண்டு உறுதிமொழிகளை எடுக்க வேண்டாம்.
ஒவ்வொரு விநாடியையும் உங்கள் இதயத்தைச் சுத்தமாக்கி அன்பால் நிரப்புங்கள். அப்போது கடவுள் உங்களுடையவராக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்; அன்புடன் நீங்கள் இருப்பீர்கள்!