உங்கள் மனதில் குடியிருக்கும் ஆறு பாம்புகளை அடக்குங்கள்! - ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!

காமம் முதல் பேராசை வரை நம்மை ஆட்டிப்படைக்கும் உணர்ச்சிகளை அடக்கி, இக்கட்டான சூழலிலும் ராமரைப் போல சமநிலையை அடைவது எப்படி? வாழ்வை மாற்றும் ஶ்ரீ சத்ய சாயிபாபா அற்புத அருளுரை!
Sri Sathya Sai Baba
Sri Sathya Sai BabaAI Image
ச. நாகராஜன்

மங்கையர் மலர், தினமணி, தினமணி சுடர், ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், மாலைமலர், தினபூமி, Hindu உள்ளிட்ட 46 இதழ்களில் 6000க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியவர். இதுவரை வெளியான புத்தகங்கள்; Pustaka - 139 புத்தகங்கள் (Paper back, Digital Printed books) Nilacharal - 61 புத்தகங்கள் (Digital books) (FROM LONDON) சென்னை விநாயகா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்களின் வெளியீடு 19 புத்தகங்கள் மொத்தம் 219 புத்தகங்கள்.

Updated on
deepam strip
deepam strip

வேங்கடகிரியில் 1968ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா ஆற்றிய அருளுரை:

நீங்கள் பெறுவதற்காக ஏங்கி அழுத அனைத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். நீங்கள் அற்பமான விஷயங்களுக்காக, கண நேர பெருமைக்காக, விரைந்து ஓடிவிடும் புகழுக்காக ஏங்கி இருப்பதை அறிந்து கொள்வீர்கள். உங்களைச் சுத்தப்படுத்தி மேன்மை பெற நீங்கள் இறைவனுக்காகவே ஏங்க வேண்டும்.

உங்கள் மனதில் விஷத்தைக் கக்கிக் குடியிருக்கும் ஆறு பாம்புகளைப் பற்றி – காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாச்சர்யம் ஆகியவை பற்றி எண்ணி நீங்கள் அழ வேண்டும். தனது மகுடியினால் அவற்றை அடக்கும் பாம்பாட்டியைப் போல அவற்றை அமைதிப்படுத்துங்கள். அவற்றை மயக்கி அடக்கும் இசையானது இறைவனின் நாமமே. அவை மயங்கி நகரவே முடியாமல் அசந்து நிற்கும் சமயத்தில் பாம்பாட்டி செய்வது போல அவற்றின் கழுத்தைப் பிடித்துத் தள்ளுங்கள். பின்னர் அவை உங்களது விளையாட்டுப் பொம்மைகள் தாம். நீங்கள் விரும்பியபடி அவற்றை நீங்கள் ஆட வைக்கலாம்.

Bhagavan Baba
Bhagavan Baba

ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!

Image 1 Image 2 Image 3

இவை அடக்கப்பட்ட போது நீங்கள் சமத்தன்மையை அடைகிறீர்கள். மரியாதையினாலோ, அவமானத்தினாலோ, லாபத்தினாலோ, நஷ்டத்தினாலோ, சந்தோஷத்தினாலோ, துக்கத்தினாலோ நீங்கள் பாதிக்கப்படவே மாட்டீர்கள்.

ராமர் அவரது தந்தை மகுடம் சூட்ட விழையும் போது அவர் மகிழவும் இல்லை அல்லது அவரைக் காட்டுக்கு அனுப்பும் போது மனம் உடையவும் இல்லை. அவரது தந்தை அவரை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டார்! பரசுராமர் அவரை சண்டைக்கு அழைக்கும் போது அவர் அமைதியாக இருந்தார்; சிவனின் வில்லை வளைத்து உடைத்து சீதையின் கரத்தைப் பிடித்தார். திரௌபதி தன் கணவர்களின் கஷ்டங்களில் பங்கு கொண்டாள். ராமர் வனத்திற்கு ஏகும் போது சீதை ராஜ்யத்தின் தலைநகரில் இருக்க மறுத்து விட்டார், அவர் கூறினார் : “ஒரு மனைவிக்கான நல்நடத்தையை எனது பெற்றோர்கள் எனக்குச் சொல்லித் தந்துள்ளனர். கணவனின் பாதங்கள் வழியே தான் எனது வழி இருக்கிறது. ராமசந்திரன் ஒரு சந்திரன். நான் அந்த சந்திரனின் ஒளி. நாங்கள் இருவரும் பிரிக்க முடியாதவர்கள். நாங்கள் சேர்ந்தே இருப்போம்.”

சுய விருப்பத்தினால் ராமருடன் கூடவே சென்ற லக்ஷ்மணனின் மனைவியான ஊர்மிளா, “நான் நகரிலேயே இருப்பேன். நான் கூட வந்தேனென்றால் நீங்கள் ராமருக்கு சிதறாத கவனத்துடன் சேவை செய்ய முடியாது” என்றாள். இது அவளது பெரும் சிறப்பைக் காட்டுகிறது. ராமரின் தாயாரான கோசலை தனது அந்தப்புரத்திற்கு ராமர் வருகை தந்த போது மகுடாபிஷேகத்திற்கு முன்னர் ஆசி பெறத் தான் அவர் வருகிறார் என்று நினைத்து மகிழ்ந்தார். ஆனால் ராமர் வனவாசத்திற்கு அவரது ஆசியை வேண்டிய போது அவர் திடுக்கிட்டார்.

“நான் வனத்தில் இருக்கும் பதினான்கு வருடங்களும் நீங்கள் சந்தோஷத்துடன் இருப்பேன் என்று எனக்கு வாக்குறுதி அளியுங்கள்” என்று ராமர் வேண்டினார்.

“நான் உன்னுடன் வருகிறேன். பெயருக்குத் தான் நான் ராணி. எனது வாழ்க்கை கண்ணீரால் ஆனது. விஸ்வாமித்திரர் உன்னை தன்னோடு அழைத்துச் சென்றார். அரக்கர்களை எதிர்த்து நீ கழித்த நாட்கள் முழுவதும் நான் கவலையுடன் இருந்தேன். பின்னர் பரசுராமர் உன் முன்னே வந்து போருக்கு அழைத்தார். நான் சொல்லொணாத் துயரை அடைந்தேன். நீ இல்லாமல் என்னால் சந்தோஷமாக இருக்க முடியாது” என்றார் கோசலை.

ஆனால் தனது எஜமானரும் தலைவருமான தந்தை தசரதனுடன் அவர் இருக்க வேண்டும் என்று கோசலையை ராமர் சமாதானப்படுத்தினார்.

“நீ போற்றிக் காக்கும் தர்மமே உன்னைக் காக்கட்டும்” என்று கோசலை அவருக்கு ஆசி வழங்கினார்.

தர்மமே மரியாதை.. மனிதனுக்கான ஆசைகள், உணர்ச்சிகள், துடிப்புகள் ஆகியவற்றிற்கு அறிவு இடும் எல்லை அது.

ப்ரசாந்தி வித்வத்மஹாசபையின் உறுப்பினர்களுக்கு அதன் முக்கியத்துவத்வம் மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு அதைப் பயன்படுத்துவத்துவது குறித்த விளக்கம் ஆகியவற்றை அளிக்கும் பொறுப்பை நான் தந்துள்ளேன்.

மானவா (மனிதன்) என்றால் எவன் ஒருவன் மனதைக் கவனிக்கிறானோ (அளக்கிறானோ) அவனே மனிதன். கட்டுப்படுத்தமுடியாதபடி காட்டுத்தனமாக ஓடுபவன் மனிதன் இல்லை. கட்டுப்பாட்டிற்கும் ஒழுங்கிற்கும் ஒழுக்கத்திற்கும் விருப்பத்துடன் தானாகவே அவன் அடி பணிகிறான். (அவனே மனிதன்.)

logo
Kalki Online
kalkionline.com