ஒரு மாதம் ஆண், ஒரு மாதம் பெண்! சிவபெருமான் கொடுத்த விசித்திர சாபத்தின் பின்னணியில் உள்ள மர்மம்?

ஆண்மையையும் பெண்மையையும் மாறி மாறி உணர்ந்த வைவஸ்தனின் மகன் ஸ்சுத்யும்னனின் ஆச்சரியமூட்டும் புராணக் கதை.
king sudyumna story - புராணக் கதை
king sudyumna story - புராணக் கதைAI Image
ஆ.நர்மதா

வணக்கம்! என்னுடைய பெயர் ஆ.நர்மதா. நான் ஒரு முதுநிலை வேதியியல் பட்டதாரி. விருதுநகர் அருகில் இருக்கும் பாளையம்பட்டி என்னும் கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது இருந்தே எனக்கு தமிழின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. தமிழின் மீது இருந்த ஆர்வத்தினால் கவிதைகள்,கட்டுரைகள், சிறுகதைகள் எழுத கற்றுக் கொண்டேன்.இந்த சமுதாய சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் என்னுடைய எழுத்துக்கள் எப்போதும் வீரியத்துடன் இருக்கும். இல்லத்தரசியாக இருந்து கொண்டு என்னுடைய எழுத்தாற்றலை படைத்து வருகிறேன்.

Updated on: 

ஸ்சுத்யும்னன் பெண்ணாக மாறக் காரணமான அந்த விசித்திர புராணக் கதை:

இறைவனின் படைப்பில் ஆண் பெண் என்ற இருவரும் இருந்தனர். இருப்பினும் சாபத்தின் காரணமாக ஒரு மாதம் ஆணாகவும் ஒரு மாதம் பெண்ணாகவும் வாழ்ந்த ஒரு அரசனின் கதைதான் இது.

புராண காலத்தில் சூரியவம்சத்தில் பிறந்த ஒரு மன்னன் இருந்தான். அவன் பெயர் வைவஸ்தன் அவன் பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் கடும் மனவேதனை அடைந்து கொண்டிருந்தான். மன்னனாக இருந்தாலும் “புத்திர சோகம் பொல்லாதது” என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டையே ஆட்சி புரிந்தாலும் அவனால் புதல்வன் இல்லை என்ற குறையை ஏற்க முடியவில்லை. அதனை போக்குவதற்காக அவன் வசிஷ்ட முனிவரிடம் உதவி கூறினார்.

வசிஷ்ட முனிவரும் வைவைஸ்தனக்கு உதவ, ஒரு யாகம் நடத்தினார். அந்த யாகத்தில் வைவைஸ்தனிற்கு இளா என்ற பெண் குழந்தைப் பிறந்தது. இருப்பினும் வைவைஸ்தனுக்கு ஆண் வாரிசு வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.

ஆனால் வைவஸ்தனின் மனைவி ஸ்ரதாவிற்க்கோ பெண் குழந்தைதான் பிடித்திருந்தது. ஸ்ரதாவின் விருப்பத்திற்கு ஏற்ப பெண் குழந்தை பிறந்ததால் வைவைஸ்தன் மிகுந்த மனவேதனை அடைந்தான்.

இதனைப் புரிந்துகொண்ட வசிஷ்ட முனிவர் அவருடைய தவ வலிமையினால் பிறந்த இளா என்ற பெண் குழந்தையை ஸ்சுத்யும்னன் என்ற ஆண் குழந்தையாக அவனை மாற்றினார். ஸ்சுத்யும்மனன் வளர்ந்து அரசாள தொடங்கினான். அவன் ஒருநாள் அவனுடைய காவலர்களுடன் சேர்ந்து ஒரு காட்டிற்கு வேட்டையாடச் சென்றிருந்தான்.

அப்பொழுது அறியாமல் சிவனும் பார்வதியும் விளையாடிக் கொண்டிருந்த ஒரு வனத்திற்குள் புகுந்தான். அந்த வனத்திற்குள் நுழையும் ஆண்கள் யாராக இருந்தாலும் அந்த நொடியே பெண்ணாக மாறிவிடுவார்கள் என்ற சாபம் இருந்தது. சாபத்தின் காரணமாக ஸ்சுத்யும்மனன் மீண்டும் இளா என்ற அழகிய பெண்ணாக மாறினான்.

king sudyumna story - புராணக் கதை
king sudyumna story - புராணக் கதைAI Image

ஸ்சுத்யும்மனன் தான் ஏன் பெண்ணாக மாறினேன் என்று தெரியாமல் செய்வதறியாது அந்த காட்டிற்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தாள். அப்பொழுது சந்திர பகவானின் மகனான புதன் பகவான் இளாவின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்துகொண்டான்.

அவ்விருவருக்கும் ருருரவைஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. காலங்கள் உருண்ஓடின. பின் இளா தன்னுடைய சாபத்தை நீக்க கோரி வசிஷ்ட முனிவரை நாடினால். வசிஷ்ட முனிவரும் இளாவின் துயரைக் கண்டு மனவேதனை அடைந்து சிவபெருமானை நோக்கி சாப விமோசனம் அளிக்குமாறு வேண்டினார்.

சிவபெருமான் சாப விமோசனம் அளித்ததன் மூலம் நாம் அறியும் புராணக் கதை:

ஆனால் சிவபெருமான் கொடுத்த சாபத்தை மீண்டும் பெறமுடியாது . இருப்பினும் ஸ்சுத்யும்னன் மன வேதனையை அறிந்து நான் அந்த சாபத்தை மாற்றி கொடுக்கின்றேன். ஸ்சுத்யும்னன் ஒரு மாதம் பெண்ணாகவும் ஒரு மாதம் ஆணாகவும் வாழ்வான் என்று அருளினார்.

இதையும் படியுங்கள்:
25 தலைகள், 50 கைகள்! நீங்கள் அறிந்திராத சிவபெருமானின் பிரம்மாண்ட 'மகா சதாசிவ மூர்த்தி' வடிவம்!
king sudyumna story - புராணக் கதை

அச்ச சாபத்திற்கு ஏற்பவே ஸ்சுத்யும்னன் ஒரு மாதம் முழுக்க ஆணாக இருந்து நாட்டை ஆட்சி புரிவான், ஒரு மாதம் பெண்ணாக மாறி புதன் பகவானுடன் இல்லற வாழ்க்கையில் இணைந்து இருப்பான்.

பல காலங்கள் கழித்த பின் ஸ்சுத்யும்னன் தன்னுடைய மகனான ருருரவைஸ் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு காட்டிற்குள் சென்று இறைவனை நினைத்து தவ வாழ்க்கை மேற்கொண்டான்.

இக்கதையை வாசிப்பதன் மூலம், மனித வாழ்வின் இரு துருவங்களாக விளங்கும் ஆண்மை மற்றும் பெண்மை ஆகிய இருவேறு உணர்வுகளின் ஆழத்தையும், பிரபஞ்ச விதிகளின் சமநிலையைப் பற்றிய ஒரு புதிய ஆன்மீகப் புரிதலையும், மனித மனதின் பக்குவத்தையும் உங்களால் முழுமையாக உணர்ந்துகொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com