

உலகிற்கே தெரிந்தவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.
விவேகானந்தர் அவரது சிஷ்யர்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் எப்போதும் அரை வேட்டியில் தான் இருப்பார். அவர் தனது மனைவியை ஸ்ரீ சக்தியாக நினைத்தார். சாரதா தேவிக்கு அபிஷேகம், மாலை சூட்டி மஞ்சள், குங்குமம் வைத்து ஸ்ரீ சக்தியாக நினைத்தார்.
அவர் பொருளாதார ரீதியில் மிக மிக ஏழை. ஆனால் மெய்ஞானம் என்று வந்து விட்டால் அவர் ஒரு தீர்க்கதரிசி.
ஞானம் அவருக்கு கையில் உள்ள இனிப்பு போல.
கொல்கத்தா காளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார்.
அவரை பற்றி ஒன்றும் தெரியாமல் போய் இருக்க வேண்டும். ஆனால் அவர் சிஷ்யர் விவேகானந்தர் அதற்கு இடம் தரவில்லை.
முதன் முதலில் விவேகானந்தர் அவரை சந்திக்கும் போது அவர்,
“ ஏன்… அப்பா இங்கு வர இவ்வளவு நேரம்… ?” என்று கேட்க,
விவேகானந்தருக்கு ஒன்றும் புரிய வில்லை.
“என்ன இது? இவர் சம்மந்தம் இல்லாமல் பேசுகிறாரே… ?” என்று நினைத்தார்.
அவர் ஒரு பைத்தியம் என்று முடிவு செய்தார்.
இப்படி 3….4 … சந்திப்பில் எதுவும் நடக்கவில்லை.
ஆனால் ஒருமுறை விவேகானந்தர் அமர்ந்து கொண்டு இருந்த போது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் கால்கள் விவேகானந்தர் மீது பட்டது.
அட கடவுளே… !
இது என்ன அதிசயம்… ?
ஆம்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கால் பட்டப்போது விவேகானந்தருக்கு 440 வால்ட் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது.
உடல் முழுக்க முழுக்க மெய் சிலிர்த்தது.
விவேகானந்தருக்கு ஒன்றும் புரியவில்லை.
ஆனால் ஒன்றை உணர்ந்தார்.
நிச்சயமாக அவர் பைத்தியம் அல்ல. அவருக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக உணர்ந்தார்.
அவருக்கு வேதாந்தம் கற்க ஆசை.
ஆதலால் விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை தனது குரு என்று முடிவு செய்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானம் விவேகானந்தரை ஆட்டி வைத்தது.
விவேகானந்தர், தான் அவரை ‘பைத்தியம்’ என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று உணர்ந்தார்.
விவேகானந்தர் தனது ஆசையை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் காதுகளில் போட்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் புன்னகை கண்டு விவேகானந்தர் சந்தோஷம் அடைந்தார்..
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆலோசனையை ஏற்று கன்னியாகுமரி சென்று அங்கே தியானம் செய்தார்.
அலை ஓசையுடன் விவேகானந்தர் ஆழந்து தியானம் செய்தார்.
அப்போது தான் அவர் குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வார்த்தைகள் அவரது காதில் விழுந்தன.
"சிகாகோவில்… அதாவது அமெரிக்காவில் ‘உலக மதங்களின் மாநாடு’ ஒன்று நடக்கின்றது. நீ நிச்சயமாக செல். வெற்றியுடன் திரும்பி வா… !”
என்று அழுத்தம் திருத்தமாக குரு சொன்னதை கேட்டார்.
ஆம்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் முடிவை ஏற்று புறப்பட்டு தமிழகம் வந்தார். சில ஆன்மீகவாதிகள் மூலம் பணம் கிடைத்தது.
விவேகானந்தர் சிகாகோவுக்கு சென்றார்.
பின்னர் நடந்தது சரித்திரம் ஆனது.
விவேகானந்தர் புகழ் உலகம் முழுவதிலும் பரவியது. அதே நேரத்தில் விவேகானந்தர் தனது குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானம் உலகை அதிர்ச்சியில் மூழ்கியது.
விவேகானந்தர் தனது குருவை உலகிற்கே அறிமுகம் செய்து வைத்தார்.
ஆம்.
விவேகானந்தர் முடிவு செய்து, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் மடம் முதலில் மேற்கு வங்காளம் மேலுரில் துவங்கி வைத்தார்.
குருவுக்கு செய்ய வேண்டியதை எல்லாம் திறம்பட நடத்தினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் உத்தரவை மீறாமல் விவேகானந்தர் செய்து முடித்தார்.
இங்கு ஒன்று முக்கியம்.
விவேகானந்தர் இல்லாவிட்டால்
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
இல்லை.
குருவே சரணம்… !