தொடர்கதை: உற்சவர் - அத்தியாயம் 1 - முதல் வெள்ளம்

கீழ்மின்னல் ஆற்றின் ரகசியமும் ஆழிப்பெருமாளின் அற்புதமும்
Urchavar - Tamil Series Story - 1
Urchavar - Tamil Series Story - 1Image Credit: ChatGPT
ஆர்கி

'ஆர்கி' என்ற புனைப்பெயரில் எழுதி வரும் ராஜசிம்மன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரிக் காலம் முதலே கதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், சமீப காலமாகதான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதையான வினைச்சுழல், நடுகல் இணைய இதழில் வெளியானது. கல்கி ஆன்லைனில் வெளியாகி இருக்கும் 'உற்சவர்' எனும் படைப்பு வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான தொடர்கதை.

Updated on: 
Deepam strip
Deepam strip

உற்சவர் - அத்தியாயம் 1 — முதல் வெள்ளம்

மணி எட்டு. அலாரம் அடிக்கப் பதறி எழுந்தான் முரளி.

வழக்கம்போல், இது அவன் வைத்திருந்த மூன்றாவது அலாரம். ஆனால், இன்றோ வழக்கமான நாளில்லை.

தன்னையே நொந்துகொண்டு படுக்கையிலிருந்து எழுந்தான்.

அருகில், பாலாஜி விட்டுச் சென்றிருந்த ஒரு குறிப்பு இருந்தது.

“டேய் முரளி, சாரிடா. நாம நேத்து கொஞ்சம் சீக்கிரம் தூங்கப் போயிருக்கணும். நான் அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண விடியற்காலையிலேயே கிளம்பிட்டேன். நீ ஒரு ஆறரை மணிக்காவது வந்துடு. அப்போதான் நல்ல இடம் பிடிச்சு எல்லாத்தையும் பார்க்கமுடியும். இந்த வருஷம் உற்சவர் எப்போ புறப்படுவார்னு தெரியாது. ஆனா, காலை 8 மணி முதல் 11 மணிக்குள் அவர் புறப்படலாம்.”

வெளியே காற்று இதமாக வீசியது. லேசான குளிரும் இருந்தது. பருவமழையே இன்னும் தொடங்காத நிலையில், அன்றைய நாள் மிகவும் இதமாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு நாளில் முரளி சற்று தாமதமாக எழுந்ததில் அவனை மட்டும் குறை சொல்லமுடியாது.

Loading content, please wait...