தொடர்கதை: உற்சவர் - அத்தியாயம் 2 - ஸ்தல புராணம்

கீழ்மின்னல் ஆற்றின் ரகசியமும் ஆழிப்பெருமாளின் அற்புதமும்
Urchavar - Tamil Series Story - 2
Urchavar - Tamil Series Story - 2Image Credit: ChatGPT
ஆர்கி

'ஆர்கி' என்ற புனைப்பெயரில் எழுதி வரும் ராஜசிம்மன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரிக் காலம் முதலே கதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், சமீப காலமாகதான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதையான வினைச்சுழல், நடுகல் இணைய இதழில் வெளியானது. கல்கி ஆன்லைனில் வெளியாகி இருக்கும் 'உற்சவர்' எனும் படைப்பு வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான தொடர்கதை.

Updated on: 
Deepam strip
Deepam strip

உற்சவர் - அத்தியாயம் 2 - ஸ்தல புராணம்

"ஸ்தல புராணம், இந்தத் திருத்தலத்தின் பெயர் மூவெள்ளமவர்.

இது பல்லவர்களாலும், பின்பு சோழர்களாலும் நிர்வகிக்கப்பட்ட திருக்கோயில். ராமானுஜர் சுவாமிகள் பலமுறை வந்து, தங்கி, பெருமாளைப் பற்றிப் பாடியது இன்னொரு விசேஷம். கல்வெட்டுகள்ல நமக்கு கோயிலைப் பத்தி பல விஷயம் கிடைக்கிறது.

மூலவர் அனலணையாழிப் பெருமாள். உற்சவர் ஷட்வர்ஷஜப் பெருமாள். இவரை ஆழிப்பெருமாள், அருள்வரப் பெருமாள், வெள்ளமவ பெருமாள் என்றும் அழைப்பர்.

ஆழிப்பெருமாள் கருடன் மேலே வீற்றிருக்க, வலப்பக்கம் சுமுகனும், இடப்பக்கம் சுவார்ச்சனும் இருக்கின்றனர். இது ஒரு அபூர்வமான காட்சி.

ஸ்ரீதேவி, பூதேவி உற்சவருக்கு மட்டும்தான். மூலவர் ஒரு காரியமாகப் போறதால, இங்க பார்த்தேள்னா, கருடன் கால் அந்தரத்துல இருக்கும். பறந்த வண்ணம் காட்சியளிக்கிறார் பெருமாள்.

கூட இருக்கிற சுமுகனும் சுவார்ச்சனும் கருடனின் புத்திரர்கள். பெருமாளோடு பயணிக்கிறார்கள்.

இந்தக் கோயிலுக்கு “ரெட்டை கோயில்”னும் ஒரு பேரு உண்டு.

Loading content, please wait...