தொடர்கதை: உற்சவர் - அத்தியாயம் 5 - கருட மண்டபம்

கீழ்மின்னல் ஆற்றின் ரகசியமும் ஆழிப்பெருமாளின் அற்புதமும்
Urchavar - Tamil Series Story - 5
Urchavar - Tamil Series Story - 5Image Credit: ChatGPT
ஆர்கி

'ஆர்கி' என்ற புனைப்பெயரில் எழுதி வரும் ராஜசிம்மன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரிக் காலம் முதலே கதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், சமீப காலமாகதான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதையான வினைச்சுழல், நடுகல் இணைய இதழில் வெளியானது. கல்கி ஆன்லைனில் வெளியாகி இருக்கும் 'உற்சவர்' எனும் படைப்பு வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான தொடர்கதை.

Updated on: 
Deepam strip
Deepam strip

உற்சவர் - அத்தியாயம் 5 - கருட மண்டபம்

காலம்: இன்று

இடம்: மூவெள்ளமவர் சன்னிதி

“எல்லா நோயும் தீரும், எல்லா செல்வமும் சேரும்” என்ற குரல் வந்த திசையைப் பார்த்த பாலாஜி, பிறகு சிரித்துக்கொண்டே, “நமக்கில்லை, நமக்கில்லை அக்கா” என்றான்.

அத்துடன் முரளியைப் பார்த்து, “ஒருவழியா வந்தியே. இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா…” என்று முடிப்பதற்குள், முரளி,

“அதான் வந்துட்டேன் இல்ல. வா, போலாம்” என்றான்.

“அம்மா, மாமாவோட கரையில இருக்கா. அப்பாதான் என்னை அனுப்புச்சார். எதுக்கும் கருடாழ்வார் சன்னிதிக்கு உன்னைப் போய் விளக்கு ஏத்திட்டு வரச் சொன்னார். நான், அம்மா, மாமா, பக்கத்தாத்துப் பாட்டிலாம் வேட்டுவானம் சுரங்க மேட்டுல இருக்கோம். நீயும் முரளியும் வேகமா வந்துடுங்கோ.” எனக் கூறி விடைபெற்றாள் பத்மா.

“சீக்கிரம் வா. விளக்கேத்திட்டு கிளம்புவோம்” என்று முரளியைப் பார்த்துச் சொல்லிவிட்டு பாலாஜி கோயிலை விட்டு வெளியேறினான்.

Loading content, please wait...