

காலை பத்து மணி. மக்கள் கூட்டம் ஆர்வத்துடன் ஆற்றை உற்றுநோக்கிக் கொண்டிருந்தனர். சிலரோ, கடந்த ஐம்பது வருடங்களில் மூன்றாவது வெள்ளம் எப்போதெல்லாம் வந்தது, இதுவரை என்றாவது வெள்ளம் வராமல் போயிருக்கிறதா, இன்று வராமல்போக வாய்ப்பிருக்கிறதா, ஏன் இது ஆறு வருடங்களுக்கு ஒருமுறைதான் வருகிறது, இதில் ஏதாவது மர்மம் இருக்கிறதா, இல்லை யாராவது நேரம் பார்த்து அணையைத் திறந்துவிடுகிறார்களா, அப்படியென்றால் ஐநூறு வருடங்களுக்கு மேலாக இது எப்படித் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது என்பது போன்ற பல கேள்விகள் குறித்து விவாதித்துக்கொண்டிருந்தனர்.
கீழ்மின்னல் ஆற்றின் ஒரு புறத்தில் ஆழிப்பெருமாள் கோயிலும், மறுகரையில் படகுத்துறை மண்டபமும் இருந்தன.