தொடர்கதை: உற்சவர் - அத்தியாயம் 6 - மூன்றாம் வெள்ளம் (தொடர்ச்சி)

கீழ்மின்னல் ஆற்றின் ரகசியமும் ஆழிப்பெருமாளின் அற்புதமும்
Urchavar - Tamil Series Story - 6 (2)
Urchavar - Tamil Series Story - 6 (2)Image Credit: ChatGPT
ஆர்கி

'ஆர்கி' என்ற புனைப்பெயரில் எழுதி வரும் ராஜசிம்மன், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்ட இவர், கல்லூரிக் காலம் முதலே கதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டிருந்தாலும், சமீப காலமாகதான் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதையான வினைச்சுழல், நடுகல் இணைய இதழில் வெளியானது. கல்கி ஆன்லைனில் வெளியாகி இருக்கும் 'உற்சவர்' எனும் படைப்பு வித்தியாசமான நடையில் எழுதப்பட்ட சுவாரஸ்யமான தொடர்கதை.

Updated on: 
Deepam strip
Deepam strip

உற்சவர் - அத்தியாயம் 6 - மூன்றாம் வெள்ளம் (தொடர்ச்சி)

அப்போது, மூன்று கழுகுகள் ஒரே அணிவகுப்பில் படகை நோக்கிப் பறந்து சென்றன.

அவை தொடர்ந்து படகைச் சுற்றி வந்தன. கூட்டத்தின் குரல் இன்னும் ஆயிரம் மடங்கானது. எல்லோரும் பக்திப் பரவச நிலையில் இருந்தனர்; பக்கத்தாத்துப் பாட்டி முதற்கொண்டு.

“ரேணுகா, இங்க பாருடி. உனக்குப் பெருமாள் அனுக்ரஹம் பண்ணிட்டார்” என்று வீல்சேர் பக்கம் திரும்பிய பாட்டி, பேரதிர்ச்சியுடன்,

“பாலாஜி, பாலாஜி, பத்மா, இங்க பாருங்கோ!” என்று கூப்பிட,

ரேணுகா ஆழ்ந்த பிரார்த்தனையில் நின்றுகொண்டிருந்தாள்.

அதைப் பார்த்த பாலாஜிக்கும் பத்மாவுக்கும் என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ரேணுகா கண்களைத் திறக்கும் வரை அனைவரும் காத்திருந்தனர். என்றோ ஒரு நாள் எழுந்துவிட மாட்டாளா என்று ஆறு வருடங்களாகக் காத்திருந்த அவர்களால், இன்னும் சில நிமிடங்கள் காத்திருக்கமுடியாதா என்ன?

Loading content, please wait...