சிறுகதை: இந்திரன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும்!

Tamil short story - indiran petra sabhamum pengal mathavidai petra kathaiyum
Lord vishnu and Indra
Published on

ஒருமுறை குரு பிரகஸ்பதி இந்திரன் மீது கோபம் கொண்டார். இதை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அரக்கர்கள் தேவலோகத்தைத் தாக்கினர். அப்போது இந்திரன் ராஜ்ஜியத்தை விட்டு ஓடி பிரம்மாவை அணுகினார். அப்போது பிரம்மா இந்திரனிடம் "உனக்கு இராஜ்ஜியம் கிடைக்க வேண்டுமென்றால் நீ ஒரு முனிவருக்கும் பணிவிடை செய்ய வேண்டும். அந்த முனிவர் மனம் மகிழ்ந்து போனால் உனக்கு உன் ராஜ்ஜியம் கிடைக்கும்" என்றார். அவரின் அறிவுரை படி ஒரு முனிவருக்கு இந்திரன் பணிவிடை செய்யத் துவங்கினார்.

அந்த முனிவரின் தாய் ஒரு அசுர இனத்தைச் சேர்ந்தவர். ஆகையால் அந்த முனிவர் அசுரர்களுக்கு நெருக்கமாக இருந்தார். அந்த முனிவர் அசுரருடன் நெருக்கம் காட்டி வந்ததை அறிந்து இந்திரன் அந்த முனிவரைப் கொலை செய்தான். முனிவர் அல்லது குருவைக் கொலை செய்வது மிகப் பெரிய குற்றமாகும். இதில் இருந்து தப்பிக்க இந்திரன் மலரில் மறைந்து விஷ்ணுவை வணங்கினான். இதனால் மகிழ்ந்த விஷ்ணு அவரைக் காப்பாற்றுவதாகக் கூறினார். அந்தக் குற்றத்தில் இருந்து தப்பிக்க அறிவுரையும் அளித்தார். அதில் இந்திரன் தனது சுமைகளை மரம், பூமி, நீர் மற்றும் பெண்ணுடன் வகுத்துக் கொள்ளக் கூறப்பட்ட தாக கதையில் தெரிகிறது.

சாபத்தின் நான்கில் ஒரே பங்கு மரத்திற்கு வரமாக அளிக்கப்பட்டது. அதாவது வாடினாலும் மீண்டும் உயிர் பெற வரம் அளிக்கப்பட்டது. நான்கில் இரண்டாம் பங்கு நீருக்கு தரப்பட்டது. இந்த நீர் மற்ற பொருட்களை சுத்தம் செய்ய, புனிதமடைய உதவும் என வரமளிக்கப்பட்டது. நான்கில் மூன்றாம் பங்கு பூமிக்கு வரமாக அளிக்கப்பட்டது. பூமி வறண்டு போனாலும் மீண்டும் தானாக புத்துயிர் பெறும் என்று வரமளிக்கப்பட்டது.

நான்காம் பங்கு பெண்களுக்கு மாதவிடாயாக அளிக்கப்பட்டது. இந்த வரத்தின் மூலம் பெண்கள் ஆண்களைவிட மதிப்பு அதிகம் பெறுவார்கள் என்று அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை; ஜன்மப் பகை!
Tamil short story - indiran petra sabhamum pengal mathavidai petra kathaiyum

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com