
அந்தக் கம்பெனி முதலாளி ஆனந்த் காலை அலுவலுகம் வந்து தன் அறைக்குள் நுழைந்து சீட்டில் அமர்ந்தார். என்றும் இருக்கும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அவரிடம் இல்லை!
கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான் சபாநாயகன். "என்ன ஆனந்த் இன்னைக்கு ரொம்ப சோகமா இருக்கே..? எதாவது பிரச்சனையா?" என்று கேட்டான். சபாநாயகன் அவனது நெருங்கின நண்பன் என்பதால் தனக்கடுத்த பதவியைக் கொடுத்து அலுவலகத்தில் அமர்த்தியிருந்தான். அந்த ஆத்மார்த்த நண்பனைப் பார்த்த பிறகுதான் மற்றவர்களைச் சந்திப்பது ஆனந்தின் வழக்கம்.
"ஆமா… இன்னைக்கு காலைலயே சங்கர் என்னை மூடவுட் ஆக்கிவிட்டான்!" என்றான் ஆனந்த்.
சங்கர் கொஞ்சமும் இங்கிதம் தெரியாதவன்.
"என்ன பண்ணினான்?" கேட்டான் சபாநாயகன்.
"இல்லை... நம்ம கம்பெனி வளாகத்துக்குள் ஒரு கோயில் கட்டியிருக்கோம... அதுக்கு இனிமேதான் கும்பாபிசேகம் முறைப்படி தொடர் பூஜை எல்லாம் பண்ணணும்..! ஆனா, கோயில் ஸ்பாதபிதம் நடந்துட்டு இருக்கும்போதே... அந்த சங்கர் நச்சு வாயை வைத்து என்னை மூடவுட் ஆக்கிட்டான்!"