
“ஹர ஹர மஹாதேவ!”
அனைவரும் கோஷமிட, அன்றைய உபந்யாசம் நன்றாக முடிந்தது.
அனைவரும் நாராயண சாஸ்திரிகளை மேடைக்கருகில் சூழ்ந்து கொண்டனர்.
“ஸ்வாமிகளே! நீங்கள் சொன்னபடி எனக்கு ப்ரமோஷன் கிடைத்து விட்டது. எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான்...” நெஞ்சம் நிறைந்த நன்றியுடன் ஒரு டெக்கி தன் ஆர்டர் காபியை அவரிடம் தந்து வணங்கினான்.
முண்டியடித்துக் கொண்டு வந்த ஒரு மாமி, “பெரியவா உங்க ஆசியினாலே பொண்ணுக்கு நிச்சயமாயிடுத்து. நீங்க தான் வந்து கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்”
எல்லோரையும் மகிச்சியுடன் ஆசீர்வதித்தார் சாஸ்திரிகள்.
உபந்யாசம் செய்த களைப்பு தீர தாகத்திற்கு தீர்த்தம் அருந்த உபந்யாச மண்டபத்தின் கோடியில் இருந்த தட்டி போட்டு அடைத்திருந்த நிர்வாக அறையை நோக்கிச் சென்றார் சாஸ்திரிகள்.
அங்கு மூடியிருந்த கதவின் அருகில் போகும் போது தன் பெயரைச் சொல்லி உரத்த குரலில் பேச்சு நிகழவே அவர் சற்றுத் தயங்கி நின்றார்.