ஆன்மீகக் கதை: திலோத்தமை எதற்காகப் படைக்கப்பட்டாள்?

Tilottama - Asuras
Tilottama - AsurasAI Image
Published on
Deepam strip
Deepam strip

புராண வரலாற்றில் காச்யப்பர், அதிதி இவர்களின் வம்சாவளியில் பிறந்த சுந்தன் மற்றும் நிசுந்தன் ஆகிய இருவரும் பிரிக்க முடியாத அசுர சகோதரர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் நிகும்பன் என்ற அசுரனின் மகன்கள். இரட்டையர்களைப் போலவே எப்போதும் இணைந்தே இருந்த இவர்கள், ஒருமித்த சிந்தனையுடனும் அளவற்ற பலத்துடனும் வாழ்ந்து வந்தனர். இவர்களது ஒற்றுமை உலகையே வியக்க வைத்தது. ஒரே தட்டில் உணவு உண்பது, ஒரே படுக்கையில் உறங்குவது என நிழல் போலத் தொடர்ந்தனர். இவர்களது பலம் தனித்தனியாக இருந்ததை விட, இருவரும் இணைந்திருந்தபோது எவராலும் வெல்ல முடியாத மகா சக்தியாக உருவெடுத்தது.

​அவர்கள், உலகையே தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர விரும்பிய சகோதரர்கள். விந்திய மலையில் கடும் தவம் புரிந்தனர். கோடை காலத்தில் பஞ்சாக்னி மத்தியிலும், குளிர் காலத்தில் நீரிலும் நின்று ஐம்புலன்களையும் அடக்கித் தவம் செய்தனர். இவர்களது தவத்தின் வெப்பம் தேவருலகைத் தாக்கியது.

பல ஆண்டுகள் நீடித்த இவர்களின் தவத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள், பல இடையூறுகளைச் செய்தும் அவர்களது மனதை மாற்ற முடியவில்லை. இறுதியில் பிரம்மதேவன் அவர்கள் முன் தோன்றினார்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com