
நாம் பகவத் கீதை பற்றி நன்றாகவே அறிந்து உள்ளோம். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அருளிய உபதேசம்தான் பகவத் கீதை.
இது என்ன உத்தவ கீதை..?
இந்த உத்தவர்..? இவர் அமைச்சர், சித்தப்பவின் மகன்.
மேலும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தேரோட்டியாக இருந்தவர். சர்வ சாதாரணமாக இருப்பார். ஸ்ரீ கிருஷ்ணர் பலருக்கு வரம் கேட்டதை கொடுத்து உள்ளார்.
ஆனால் இதுவரை.. அதாவது குருசேத்திரப் போர் முடிந்த பின்பும் உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் இடம் எதுவும் கேட்கவில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் இது ஏன் என்று கேட்டபோது உத்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் மீது சற்று கோபத்துடன் கேட்கிறார்.
ஏன் போரை தடுக்கவில்லை என்று கேட்க… ஸ்ரீ கிருஷ்ணர் அவருக்கு உபதேசம் செய்கிறார். அதுதான் உத்தவ கீதை.
இது பதனென் புராணங்களில் 11 வது ஸ்கந்தமாக அமைந்துள்ளது.
இது 1367 ஸ்லோகம் உடையது. மொத்தம் 31 அத்தியாயம் உள்ளது.
இதில் அத்யாயம் 6 ஸ்லோகம் 25-ல் கிருஷ்ணரின் ஆயுட்காலம் 125 என தெரிகிறது. 125 ஆண்டு முடிந்ததும் வைகுண்டம் போய் விடுகிறார்.
சரி. உத்தவ கீதை பற்றி சற்று அறிந்து கொள்ளலாம்.
“ஏன்... குருசேத்திரப் போர் நடக்காமல் பார்த்து இருக்கலாம் அல்லவா?
ஏன் சகுனி கேட்ட எண்ணை தருமரால் போட முடியவில்லை. நீங்கள் நினைத்து இருந்தால் அது சாத்தியம் ஆகி இருக்கும் அல்லவா?”
எனக் கேட்க அவருக்கு பதிலாக சொல்வதுதான் உத்தவ கீதை. இதையும் எழுதியவர் வியாசர்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார்:
“உத்தவா, தருமர் சூதாட்டம் ஆடப் போகும் முன் இந்த விஷயம் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தெரியக்கூடாது என்று பிரார்த்தனை செய்து என்னை கட்டிப்போட்டு விட்டார்..!
மேலும், தனது தம்பிகளைப் பணயம் வைத்து ஆடும்போதும் அந்த நால்வரும் ஸ்ரீ கிருஷ்ணரை நினைக்கவில்லை.
என்னால் சூதாட்டம் நடக்கும் இடத்திற்கு செல்ல முடியவில்லை!”
கிருஷ்ணா, பாஞ்சாலியை பணயம் வைத்தபோதும் அதை தடுக்க வில்லை.
“பாஞ்சாலியும் என்னை அழைக்கவில்லை. ஆனால், துச்சாதனன் துயில் உரியும்போது, பாஞ்சாலி பூர்ண சரணாகதி அடைந்து ஆபத்பாந்தவா என்று கதறியபோது... நான் அவளின் மானத்தை காப்பற்றி உதவி செய்தேன்!”
“அப்படி என்றால் உங்களை கூப்பிட்டால்தான் நீங்கள் வருவீர்களா?”
“அப்படி இல்லை. வாழ்க்கை அவரவர் கர்மவினைப்படி நடக்கின்றது. நான் அதில் தலையிடுவது இல்லை. நான் வெறும் சாட்சி பூதமாக பக்தன் பக்கம் இருப்பேன்!”
“கிருஷணா... அப்போது பக்தன் தவறு செய்யும்போதுதான் நீங்கள் உதவிக்கு வருவீர்களா?”
“உத்தவா… அப்படி இல்லை. நான் சாட்சிபூதமாக பக்தன் பக்கம் இருக்கும்போது பக்தன் தவறு செய்ய மாட்டான்.. இது சத்தியம்.”
உத்தவர் தனக்கு என்று எதுவும் கேட்கவில்லை. ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் சில சந்தர்ப்பங்களில் மெளனம் காக்கிறார் என்றுதான் குற்றச்சாட்டுகள் வைக்கிறார்.
அதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் அவரவர் கர்மவினைப் படிதான் எல்லாம் நடக்கும். நான் உலக விவகாரங்களில் தலையிட மாட்டேன்.
வெறும் சாட்சிபூதமாகத்தான் இருப்பேன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
மேலும் பல கேள்விகளை கேட்கிறார். அதற்கு அமைதியாக ஸ்ரீ கிருஷ்ணர் பதில் அளிக்கிறார். ஆம் உபதேசம் செய்கிறார்.
பகவத் கீதை படிக்கவில்லை என்றால்கூட உத்தவ கீதையை கட்டாயம் படிக்க வேண்டும்.
ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமை, அருள், பெருமை எல்லாம் உத்தவ கீதையில் வந்து விடும்.
பகவத் கீதை படியுங்கள்…!
ஆனால், உத்தவ கீதை கட்டாயம் படியுங்கள்..!!