தமிழகக் கோவில்களும் அதிசயங்களும்!

ஸ்ரீரங்கம் கோவில்...
ஸ்ரீரங்கம் கோவில்...

ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ராமானுஜரின் உடல் ஆயிரம் வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.

திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே திருச்செந்தூர் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும் தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர் காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவம் இருக்கிறது.

தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசை படிகளில் தட்டினால் சரிகமபதநிச  என்ற இசை வருகிறது.

கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்திய ஒலி கேட்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றிஒன்று சாமி மலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல்விளக்கில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.

சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில் தினமும் சூரிய ஒளி மூலவர் மீது படுகிறது காலை மதியம் மாலை என மூன்று முறை சூரிய ஒளி விழுகிறது..

சுசீந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காது வழியாக வெளியே வருகிறது.

திருப்பூரில் உள்ள குண்டம் வடுகநாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது குழந்தை இந்த மாதத்தில் இந்த இந்த வடிவத்தில் இந்த விதமான பொசிஷன் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே கல்லின் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.

சுசீந்திரம் சிவன் கோவில்
சுசீந்திரம் சிவன் கோவில்

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணத்திற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

ஈரோடு காங்கேயத்துக்கு அருகில் மடவிளாகம் சிவன் கோவில் குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்பானை நிறைய வீபூதி தோன்றுகிறது.

சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பார்க்க முடியும் ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீ ராமரை பார்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

தாரமங்கலம் பெருமாள் கோவில்
தாரமங்கலம் பெருமாள் கோவில்

சென்னை முகப்பேரில் கரி வரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நேரில் பார்ப்பது போல் இருக்கிறது

தேனி அருகில் உள்ள சிவன் கோவிலில் அவரவர் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.

விருதுநகரில் மகான் திருப்புகழ் சாமி கோவில் திருவிழாவின் போது சாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனர் அதன்பின் எவ்வளவு பக்தர்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்து கொண்டே இருக்கிறது வேலை எடுத்து உடன் குறைந்து காலி ஆகிவிடும்..

திருமந்திர நகர் சிவன் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவின்போது தேர் ஓடும் ரதி வீதி மட்டும் சுடுவதே இல்லை.

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதை காணலாம்.

இதையும் படியுங்கள்:
யோகாவின் தலைநகரம் எது தெரியுமா?
ஸ்ரீரங்கம் கோவில்...

திண்டுக்கல் அருகே திருமலை கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும் வள்ளி சுனையின் நீர் இரவு பகல் எந்நேரமும் வென்னீராகவும் இருக்கிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திரு நாகேஸ்வரன் உடையார் கோவிலில் மீனாட்சி அம்மன் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.

சேலம் காசி விஸ்வநாதர் கோவிலில் முழுவதும் ருத்ராட்சத்தாலான தேர் ஒன்று உள்ளது.

பிரான்மலை சிவகங்கை மாவட்டம் மங்கை பாகர் கோவிலில் சிவன் யோக நிலையில் காட்சி தருகிறார் இவருக்கு ஒருமுறை அணிவித்த ஆடையை மறுபடியும் அணிவிப்பதில்லை ஒவ்வொரு முறையும் இவருக்கு புத்தாடையே அணிவிக்கப்படுகிறது. இந்த தலத்தின் தல விருட்சம் உறங்காப் புள்ளி மரம் ஆகும். பூக்கும் காய்க்கும். ஆனால் பழுக்காது. காயிலேயேஉதிர்ந்து விழுந்து விடும் இதன் இலைகள் எப்போதும் விரிவடைந்த நிலையில் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com