ரிஷப ராசி: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2026!

2026 பராபவ வருஷத்துக்கான தமிழ்ப் புத்தாண்டுப் ராசிபலன்!
Taurus - Tamil New year Rasi palan 2026
Taurus - Tamil New year Rasi palan 2026
Updated on
Deepam strip
Deepam strip

தமிழ் வருடத்தின் ஆரம்பத்தில் நிறைய சிரமங்கள் இருக்கும். பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக்கொள்வது நல்லது. (அப்புறம் அதுவே பழகிவிடும் என்ற பழைய ஜோக்கைச் சொல்லமாட்டேன்!) அப்புறம் அது மெல்ல மெல்ல மாறிச் சந்தோஷச்சூழலை அளிக்கப்போகிறது. பார்த்துக்கொண்டே இருங்களேன்.

கடந்த ஆண்டுகளைவிடவும் கூடுதலான செலவு இருக்கும். ஆனால், கூடுதலான வரவும் ஏற்படும். கணவன் - மனைவி இடையில் புரிதல் அதிகரிக்கும். அம்மா/அப்பா உடல் நலம் சீராகும். குடும்பத்தில் தட்டிப்போய்க்கொண்டிருந்த திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பல காலம் வராத உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வருடத்தின் பிற்பாதியில் அலுவலகத்தில் உங்கள் பணிகளைப் பொறுப்புடன் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு கிடைக்குமே! சக பணியாளர்கள் உங்களிடம் மரியாதையாக நடந்துகொள்வார்கள். ஓரளவு மனநிறைவு தரும் வருடமாகும்.

அரசுப் பணியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிடச் சற்றே அதிகமாக இருக்கும். கடன் கொடுப்பது மற்றும் வாங்குவது இரண்டையும் கூடுமானவரையில் தவிர்க்கப் பார்க்கலாம். ஆண்டின் ஆரம்பத்தில் பரபரப்பான நிகழ்வுகள் உண்டு.

சிறப்பான பொதுஜனத் தொடர்பு காரணமாகப் புகழ் கிடைக்கும்.  எடுக்கும் முயற்சிகளில் எப்பாடுபட்டாவது வெற்றி அடைவீர்கள்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். ஓய்வெடுத்து, உல்லாசமாய்ப் பொழுதுபோக்கும் விதமாக,

இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை. எனவே, கஷ்டங்கள் வந்தாலும் கலங்காதீர்கள். கேளிக்கை மற்றும் ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதன் காரணமாகப் பணமுடை ஏற்படாதபடி கவனமாக இருங்கள்.

நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன் – மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த ஆண்டின் துவக்கத்திலேயே கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். ஆனால், நல்ல ரிசல்ட் காரணமாக அந்தச் சோர்வு காணாமல்  போய்விடுமே.

விடாமுயற்சியால் திட்டமிட்டபடி சில பணிகளை முடிப்பீர்கள். இதற்கு நண்பர்களின் உதவி கிட்டும்.  

எதிர்காலம் மற்றும் அதைச் சார்ந்த சேமிப்புகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தடைபட்டுகொண்டிருந்த செயல்களைச் செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

மற்ற ராசிபலன்களை படிக்க Click Here

logo
Kalki Online
kalkionline.com