இங்கே சென்றால் தலையெழுத்தே மாறும்! சிவபெருமான் எடுத்த 8 விஸ்வரூபங்கள்! அஷ்ட வீரட்டானங்களின் ரகசியம்!

8 forms of lord bhairava temples
8 forms of lord bhairava
deepam strip
deepam strip

பைரவரின் எட்டு படைவீடுகளுக்கு 'அஷ்ட வீரட்டானங்கள்' என்று பெயர். பைரவர் வீரதீர செயல்களைப் புரிந்ததால் இவை இந்தப் பெயர் பெற்றன.

1. 1. திருக்கண்டியூர்

thirukandiyur
thirukandiyur

இத்தலம் தஞ்சை திருவையாறு சாலையில் திருவையாற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. இதை ஆதிவில்வாரண்யம் என்றும் கூறுவார்கள்‌. இறைவனின் திருநாமம் பிரமசிரக்கண்டீசுவரர். பிரம்மனின் அகந்தையை அழித்து அருள் கொடுத்த தலம்‌ இந்த கோவிலின் வட மேற்கு திசையில் பைரவரின் தனி சன்னதி உள்ளது.

2. 2. திருக்கோவிலூர்

Thirukovilur
Thirukovilur

திருக்கோவிலூர் கோவில் நகர் வீரட்டம் திருக்கோவலூர் நகருக்குள்ளேயே தென்பெண்ணை நதி தீரத்தில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் அந்தகாசுர சம்ஹார மூர்த்தி. அன்னை சிவானந்த வல்லி என்ற பெரிய நாயகி. ஆலயத்தின் ஈசானிய மூலையில் பைரவர் அருள் பாலிக்கிறார்.

3. 3. திருவதிகை

Thiruvathigai
Thiruvathigai

பண்ருட்டியிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்தலம்‌. இறைவனின் பெயர் வீரட்டானேஸ்வரர். ஈசானிய மூலையில் இங்கு பைரவர் எழுந்தருளியுள்ளார்‌. திரிபுரம் எரித்த இடம் இதுவே. வித்யுன்மாலி, தாரகாசுரன், கமலாக்ஷன் ஆகிய அசுரர்களை அழித்த இடம். சுந்தரமூர்த்தி நாயனார் தீட்சை பெற்ற இடம் இது. சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாறிய திருநாவுக்கரசரின் தீராத குன்மம் வியாதியை நீக்கி அவரை ஆட்கொண்ட தலம்.

4. 4. திருப்பறியலூர்

Thirupariyalur
Thirupariyalur

மாயவரம் திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ தொலைவில் செம்பொனார் கோவில் உள்ளது‌. அங்கிருந்து 2கி.மீ தொலைவில் திருப்பறியலூர் இருக்கிறது. சுவாமியின் பெயர் வீரட்டானேஸ்வரர்‌, அம்பாளின் பெயர் இளங்கொம்பனையாள். அகந்தை கொண்ட நண்பனை அழித்த இடம் இது. தட்சன் யாகம் செய்த இடமே தற்சமயம் கோவில் குளமாக இருக்கிறது.

5. 5. திருவிற்குடி

Thiruvirkudi
Thiruvirkudi

திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பனந்தாளிலிருந்து பிரிந்து 2 கி.மீ தூரம் சென்றால் திருவின்குடியை அடையலாம்‌. இக்கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது‌. இக்கோவில் இறைவனின் திருநாமம் ஜலந்தராசுரவதமூர்த்தி‌ திருமால் சுதர்சன சக்கரம் வேண்டி இறைவனுக்கு துளசியால் அர்ச்சித்து சுதர்சன சக்கரத்தைப் பெற்றார். எனவே இங்கு சிவபெருமான் வடிவில் இருக்கும் பைரவருக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

6. 6. வழுவூர்

Vazhuvoor
Vazhuvoor

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் சாலையில் 8 கி.மீ சென்றதும் வலப்புறம் திரும்ப வேண்டும். அங்கிருந்து அரை கி.மீ தூரத்தில் வழுவூர் உள்ளது‌. இறைவனின் திருநாமம் கிருத்திவாஸர்‌. அகங்காரத்துடன் தான் என்ற அகந்தையில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அழித்து திருக்காட்சி கொடுத்து அவர்களுக்கு ஞானப் செல்வம் அருளிய தலம்.

ஐயப்பன் அவதரித்த இடமும் இதுவே‌. தியானம் செய்ய விரும்புபவர்கள் இங்குள்ள மூலவர் முன்பாக தியானம் செய்ய வேண்டும்‌. இங்கு ஈசானிய மூலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அருகிலேயே சனீஸ்வரர் அமர்ந்திருக்கிறார். ஏழரைச்சனி அஷ்டமச்சனி, கண்டச்சனி அர்த்த அஷ்டமச்சனி பரிகார தலம்.

7. 7.திருக்குறுக்கை

Thirukurrukai
Thirukurrukai

மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டால் என்ற இடம் வந்ததும் பிரிந்து செல்ல வேண்டும். அங்கிருந்து 3கி.மீ சென்றால் திருக்குறுக்கை வரும்‌. இறைவனின் திருநாமம் வீரட்டேஸ்வரர். இறைவியின் பெயர் ஞானாம்பிகை‌. காமனை எரித்த இடம் இது.

இதையும் படியுங்கள்:
கடவுளுக்கே தண்டனையா? ஜெகநாதர் ஹனுமானை சங்கிலியால் கட்டிப்போட்டது ஏன்?
8 forms of lord bhairava temples

8. 8. திருக்கடையூர்

Thirukadaiyur
Thirukadaiyur

இது ஆதியில் வில்வாரண்யம் என்ற பேரில் விளங்கியது‌. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் - அபிராமி என்ற பெயர்களில் இறைவன் அருள் பாலிக்கிறார்‌. எமனை சம்ஹாரம் செய்து மார்க்கண்டேயனை காத்த இடம் இது. இதய நோயில் வருந்துபவர்கள், ஆயுளில் கண்டம் உள்ளவர்கள் இங்கு வந்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய மரண பயமின்றி வாழலாம். பைரவருக்கு ப்ரியமானவை செவ்வரளி, வில்வம். தீபமேற்றி வழிபடுவது விசேஷமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com