சுயம்பு லிங்கத்திலிருந்து வழியும் நித்ய நீரூற்று அதிசயம்!

திரிம்பகேஸ்வர் கோவில்
திரிம்பகேஸ்வர் கோவில்

ந்தியாவில் உள்ள கோவில்கள் எத்தனையோ அதிசயங்களை கொண்டிருந்தாலும், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற அதிசயம் வாய்ந்த கோவில்களை பற்றி கேட்கும் போது வியப்பாகவே உள்ளது. இன்றும் அப்படியொரு அதிசய கோவிலை பற்றித்தான் பார்க்க உள்ளோம்.

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவில்தான், திரிம்பகேஸ்வர் கோவிலாகும். இது 12 ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றாகும். கோதாவரி ஆறு உருவாகும் இடம் திரிம்பக்கின் அருகிலேயே இக்கோவில் உள்ளது. ‘குசவர்த்தா’ என்ற புனித குளமும் இங்கே உள்ளது. பழைய கோவிலை ஔரங்கசிப் அழித்துவிட்டதால், தற்போது உள்ள கோவிலை கட்டியிருப்பவர், பாலாஜி பாஜிராவ் ஆவார்.

இக்கோவில் மூன்று மலைகளுக்கு நடுவிலே அமைந்திருக்கிறது. பிரம்மகிரி, நீலகிரி, காலகிரியாகும். இக்கோவிலில் மூன்று லிங்கங்கள் உள்ளது. சிவன், விஷ்ணு, பிரம்மாவை குறிக்கிறது. இங்கே அமிர்தவர்ஷினி குளம் உள்ளது அது 98அடி ஆழம் கொண்டதாகும்.

இந்த கோவிலுக்கு வர எந்த கட்டணமும் வசூலிக்கப் படுவதில்லை. இக்கோவிலுக்கு வருவதற்கு சரியான நேரம், அக்டோபர் மோதல் மார்ச், ஜூன் முதல் செப்டம்பராகும்.

திரிம்பகேஸ்வரர் கோவிலின் அழகிய கட்டிட வேலைப்பாடுகள் ஹேமந்த்பந்த் கட்டடக்கலை பாணியில் உள்ளது. கலைநயமிக்க சிற்பக்கலை வேலைப்பாடுகள் கலாச்சார பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது.

இக்கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கத்திற்கு மூன்று முகங்கள் உண்டு. சிவன், பிரம்மா, விஷ்ணு என்பது. மேலும் இக்கோவிலின் தனித்துவத்தை கூட்டுகிறது. இக்கோவிலில் 12 வருடத்திற்கு ஒருமுறை கும்பமேளா பண்டிகை நடைப்பெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்துக்கொண்டு சிவனின் அருளை பெற்று செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிர்லிங்கம்...
ஜோதிர்லிங்கம்...

தினமும் சிவலிங்கத்திற்கு ருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. பால், தண்ணீர் போன்ற புனிதமான பொருட்களை வைத்து சிவபெருமானின் அருளை பெறுவதற்காக இந்த அபிஷேகம் செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.

இக்கோவிலின் நுழைவாயிலில் கம்பீரமான நந்தி ஒன்று ஜோதிர்லிங்கத்தை பார்த்தவாறு உள்ளது. புராணக் கதையின்படி ராமரும், சீதையும் அவர்களுடைய வனவாசத்தின் போது திரிம்பகேஸ்வரர் கோவிலுக்கு வந்ததாகவும் இங்கே ராமர் ‘ பித்ரு தானம்' செய்ததாக கூறப்படுகிறது. முன்னோர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்று செய்யப்படும் பூஜையாகும்.

இதையும் படியுங்கள்:
என்னது? இயந்திரங்கள்கூட கற்றுக்கொள்ளுமா? இயந்திரக் கற்றல் என்றால் என்ன?
திரிம்பகேஸ்வர் கோவில்

இக்கோவிலின் லிங்கத்திற்கு கீழ் நீரூற்று ஒன்று உள்ளதாகவும் அது கோதாவரியில் கலப்பதற்கு முன் சிவனுக்கு அபிஷேகம் செய்கிறது என்று நம்பப்படுகிறது. இந்த பகுதியிலேதான் கவுதம முனிவர் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் செய்த கடும் தவத்தின் காரணமாக சிவபெருமான் தன்னுடைய ஜடாமுடியிலிருந்து இங்கு கங்கை துளிகளை விழச்செய்ததாகவும் அதுவே இங்கு எப்போதும் வற்றாத நீரூற்றாக ஓடிக்கொண்டிருக்கிறது என்று நம்பப்படுகிறது. இதனால் சுயம்பு லிங்கத்திலிருந்து எப்போதும் நீர் ஊற்றிக் கொண்டேயிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய அதிசய கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது வந்து தரிசித்துவிட்டு செல்வது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com