முக்தி தரும் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மகிமைகள்..!

முக்தீஸ்வரர் திருக்கோயில்
முக்தீஸ்வரர் திருக்கோயில்
Published on

இந்த கோயில் எங்கு உள்ளது?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள சிதலப்பதி என்னும் ஊரில் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

பூந்தோட்டம் என்னும் ஊரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலத்தில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள சிவன், முன்னோர்களுக்கு முக்தி தருபவராக அருள்புரிவதால் இவரை "முக்தீஸ்வரர்" என்று அழைக்கப்படுகிறது.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இத்தலம் சிறந்த தலமாக உள்ளது.

இக்கோயிலில் மகாவிஷ்ணு தனது மூன்று கோலத்தை காட்டியபடி காட்சி தருகிறார். அதாவது சிவனது கருவறை கோஷ்டத்தில் வழக்கமாக லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணுவாக நின்ற கோலத்திலும், பிரகாரத்தில் நவக்கிரக சன்னதி அருகில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். இவ்வாறு மகாவிஷ்ணுவின் மூன்று விதமான கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். இத்தகைய தரிசனத்தை காண்பது அபூர்வமான ஒன்றாகும்.

தேவாரப்பாடல் பாடப் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 58வது தலம் ஆகும்.

வேறென்ன சிறப்பு?

இக்கோயிலில் ஆதி விநாயகர் பிற ஆலயங்களில் வீற்றிருக்கும் யானை முகத்தைப்போல் அல்லாமல், மனித முகத்துடன் மேற்கு பார்த்து தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறார்.

இக்கோயிலுக்கு அருகில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய திசையில் பாய்கிறது. இதுபோன்ற நதிகள் ஓடும் தலங்களில் உள்ள கோயில்களை வழிபட்டால் செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும், நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.

பிரகாரத்தில் உள்ள துர்க்கை எட்டு கைகளுடன் இருக்கிறாள். இவள் இடது காலை பின்னோக்கி வைத்தவாறு காலுக்கு கீழே மகிஷாசுரனும், பின்புறத்தில் சிம்ம வாகனமும் இருக்கிறது.

இங்கு உள்ள நவக்கிரக சன்னதியில், சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருக்கிறார்.

இத்தலத்தில் மட்டைத்தேங்காய் கட்டி வேண்டினால் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இதையும் படியுங்கள்:
சில மாறுதல்கள் சிறப்பான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்!
முக்தீஸ்வரர் திருக்கோயில்

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

மாதந்தோறும் அமாவாசைகளில் சிறப்பு பூஜை, சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

இக்கோயிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்யலாம்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com