விருபாக்ஷா கோவிலில் தலைகீழாக விழும் கோவில் கோபுர நிழல் அதிசயம்!!

விருபாக்ஷா கோவில்
விருபாக்ஷா கோவில்

விருபாக்ஷா கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பியில் உள்ளது. இது 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலாகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக விளங்குகிறது.

விருபாக்ஷா பெயர் வந்ததற்கான காரணம், “விருப்பா” என்றால் உருவமற்ற என்று பொருள். “அக்ஷா” என்றால் கண்கள் என்று பொருள். அதாவது உருவமில்லாத கண் என்று பொருள். இது சிவபெருமானின் மூன்றாவது கண்ணை குறிப்பதாகும்.

விருபாக்ஷா கோவிலில் சிவபெருமானும் அவரது துணைவியார்  பம்பாதேவியும் அருள் பாலிக்கிறார்கள்.

இந்த கோவிலில் உள்ள ஒரு அதிசயம், தலைகீழாக தெரிய கூடிய கோவில் கோபுரத்தின் நிழலாகும். கோபுரம் 52 மீட்டர் உயரமும்  9 அடுக்குகளையும் கொண்டது. கோவிலின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய அறையில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயத்தை காணலாம்.

விருபாக்ஷா கோவில்
விருபாக்ஷா கோவில்

பிப்பனோஸிஸ் நம்பர் வரிசையை விருபாக்ஷா கோவில் கோபுரத்தை கட்டுவதற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இதில் நேர்கோட்டு ஒளிக்கோட்பாடு மற்றும் பின்ஹோல் கோட்பாடும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட இயற்பியலை 15 நூற்றாண்டில் பயன் படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

சல்லு மண்டபத்தில் வந்து விழும் தலைகீழ் கோபுரத்தின் நிழலுக்கு காரணம், பெரிய அளவில் பயன்படுத்தப்பட்ட பின்ஹோல் கேமரா விளைவேயாகும்.

பின்ஹோல் கேமரா என்பது லென்ஸ் இல்லாத  சிறிய துவாரம் கொண்ட கேமராவாகும். ஒளி ஊடுருவ முடியாத ஒரு சின்ன துளையைக் கொண்ட இன்னொரு பக்கம். வெளிப்பக்கத்தில் இருந்து வரும் ஒளி அந்த சிறு துளை மூலம் ஊடுருவி அங்கு இருக்கும் உருவத்தை அப்படியே தலைகீழாக பிரதிபலிக்க வைப்பதாகும். இந்த செயல்முறையை  இருப்படப்பெட்டி என்றும் அழைப்பார்கள்.

விருபாக்ஷா கோவிலில் சல்லூ மண்டபமே சிறுதுளையாக செயல்படுகிறது. ஒளி கோபுரத்தின் மீது விழும் போது, அது நேரே பயணித்து வந்து சல்லூமண்டப்பதின் வாயில் வழியாக வந்து தலைகீழான கோபுர நிழலை விழ செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமில்லாமல் விருபாக்ஷா கோவிலில் உள்ள ஆத்ம லிங்கம் ஒரு நாளைக்கு மூன்று முறை நிறம் மாறுமாம். காலையில் சிவப்பு நிறமும், மதியம் வெள்ளை நிறமும் சாயங்காலம் தேன் நிறமுமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது அக்கோவிலுக்கு இன்னொரு சிறப்பையும் கூட்டுகிறது.

இதையும் படியுங்கள்:
மெழுகுவர்த்தி உருவான கதை தெரியுமா?
விருபாக்ஷா கோவில்

விருப்பாக்ஷா பம்பா கோவில் விஜயநகர பேரரசின் காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. விஜயநகர பேரரசரின் ஆட்சியிலேயே கோவிலாக எடுத்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிடக்கலையுடன் இயற்பியலையும் சேர்த்து இக்கோவிலை கட்டியிருப்பதால், அந்த அதிசயத்தை காண மக்கள் கூட்டம் தினமும் இக்கோவிலுக்கு ஆச்சர்யத்துடன் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com