இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில்!

திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்ancientterminus.com

ரு நாளில் இரண்டு நிமிடம் மட்டுமே மூடப்படும் அதிசயக் கோவில் எங்கு இருக்கிறது தெரியுமா? கிருஷ்ணன் கம்சனை கொன்ற பின்பு சினமும், பசியும் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதே சொரூபத்துடன் இன்றும் காட்சியளிக்கும் இடமே திருவார்ப்பூ கிருஷ்ணன் கோவில். ஆலிலையின் மீது துயிலும் மாதவனை தம் வீட்டுக்கு குழந்தையாகவே மக்கள் எண்ணி இன்றளவு அவனை கொஞ்சி மகிழ்ந்து வருகின்றனர்.  

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கோவில் திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில் ஆகும்.

பஞ்சபாண்டவர்கள் வனவாச காலத்தில் கிருஷ்ண விக்கிரகம் ஒன்றை வழிபட்டு வந்ததாகவும் அப்படி வழிபட்ட விக்கிரகத்தை வனவாசம் முடிந்த பின் மக்களின் வேண்டுதலுக்கு இணங்கி இங்கேயே கொடுத்துவிட்டு சென்றதாகவும் கூறுகின்றனர். இங்கே கிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் வலது கையில் உணவுடன் காட்சி தருகிறார்.

பின் கைகளில் சங்கு சக்கரம் தாங்கியுள்ளார். கிருஷ்ணர் கம்சனை கொன்ற பிறகு சினமும் பசியும் தீராமல் இருந்த ஸ்வரூபமாக இங்கு உள்ளதாக கருதப்படுகிறது. எனவே இங்கு கிருஷ்ணன் எப்போதுமே பசியுடனே இருப்பதாக நம்பப்படுகிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத வண்ணம் ஒரு நாளில் இரண்டு நிமிடம் மட்டுமே கருவறை மூடப்படுகிறது. காரணம் கிருஷ்ணன் எப்போதும் பசியோடு இருப்பதால் அவருக்கு உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமாம். இவ்வாறு அனைத்து நேரங்களிலும் கிருஷ்ணன் பசியோடு இருப்பதினால் கோவில் மூடப்படுவதே இல்லை.

3 65 நாட்களும் திறந்தே இருக்கும். தினமும் 23.58 மணி நேரம் திறந்திருக்கிறது. சூரிய சந்திர கிரகணத்தின் போதும் திறந்தே இருக்கும்.

திருவார்ப்பு கிருஷ்ணன்
திருவார்ப்பு கிருஷ்ணன்

ஒரு முறை கிரகணத்தின்போது கருவறை மூடப்பட்டு திறந்தபோது மூலவரின் இடுப்பில் இருந்த ஆபரணங்கள் விலகி இருந்தது. இடுப்பில் ஆடைகள் தளர்ந்திருந்தது. இதனைக் கண்ட ஆதிசங்கரர் கிருஷ்ணன் பசியோடு இருப்பதால்தான் இப்படி ஆனது என்று கூறினர் அன்றிலிருந்து கிரகணத்தின் போதும் கோவில் மூடப் படுவதில்லை.

இரண்டு நிமிடங்கள் கழித்து திறக்கும்போது அர்ச்சகர் கையில் கோடாரியோடு திறப்பார். காரணம் ஏதாவது ஒரு காரணத்தால் கதவு திறக்க தாமதம் ஆனால் கோடாரி துணையோடு கதவை உடைக்க அனுமதி உண்டு. கிருஷ்ணன் குழந்தை அல்லவா பசி தாங்க மாட்டார் என்பதற்காகத்தான் இந்த நடைமுறை.

நடை சாத்தப்படுவதற்கு முன் அர்ச்சகர் வெளியே வந்து இங்கே யாராவது பசியோடு இருக்கிறீர்களா என்று கேட்பார். அப்போது நாம் சென்று அந்த பிரசாதத்தை வாங்கி கொண்டால் வாழ்நாள் முழுவதும் பசிப்பிணி இருக்காது. நள்ளிரவு இரண்டு மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இந்திய பிரதமரால் கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!
திருவார்ப்பு கிருஷ்ணன் கோவில்

கேரளாவில் இரண்டு மணிக்கு திறக்கப்படும் கோவில் இது ஒன்றுதான் என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலில் சிவபெருமான், பகவதி, கணபதி சுப்ரமணியர் மற்றும் யட்சி போன்றவர்களுக்கான சன்னதியில் உள்ளன.

அமைவிடம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து வடமேற்கே 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவார்ப்பு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com