அபூர்வ 'சக்திலிங்கம்' அமையப்பெற்ற திருத்தலம்!

Amman temple...
Amman temple...
Published on

னைவருக்கும் காஞ்சி என்றால் நினைவுக்கு வருவது காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம்தான். அந்தக் கோயிலுக்குச் செல்பவர்கள் அதன் பின்புறத்தில் எளிதில் சென்று வரும் வண்ணம் அமைந்திருக்கும் கோயில்தான் "அருள்மிகு ஆதி பீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில்" என்பது. 

பெயர் காரணம்:

காசியில் இருந்து காஞ்சிக்கு சக்தி வந்து இறங்கி அன்னபூரணியாகி அன்னதானம் செய்த 'ஆதிபீடம்' தான் இந்தத் திருக்கோவில். அரக்கர்களை அழித்து நல்லவர்களுக்கு நல்லதை நல்கிய இடம் ஆதிபீடாபரமேஸ்வரி 'காளிகாம்பாள் திருக்கோயில்' என வழங்கப்படுகிறது. காஞ்சியில் காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு நூறடி தொலைவிலையே அமைந்துள்ள பழமையான திருக்கோயில் இதுவாகும்.

பூஜை முறை:

சன்னதியும், கோபுரமும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது பொதுவாக காளிகோயில் என வழங்கப்பட்டாலும் காமிக ஆகமத்தின் அடிப்படையில் காலை, மாலை இருவேளைகளில் பூஜை நடைபெறுகிறது. காலை 6:00 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4மணி முதல் 8 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கிறது. 

சத்திலிங்கத்தின் சிறப்பு;

இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் சக்தி லிங்கம் அபூர்வமானதாகும். எப்படி என்றால் இறைவனை அடைய வேண்டி தவம் மேற்கொண்ட சக்தி, இறைவனை லிங்க ரூபத்திலேயே அடையும் வண்ணம் லிங்கப் பகுதியில் சக்தியின் உருவம் பொறித்து இறையோடு கலக்கும் நிலையை காட்டும் லிங்கத்தை காண்பது தான் சிறப்பு. இது போன்ற அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. இதுதான் இத்திருக்கோயில்  சக்தி லிங்கத்தின் தனிச்சிறப்பு.

விசேஷ தினங்கள்:

பிரதோஷ நேரங்களிலும், மாலை வேளைகளிலும் இந்த லிங்கத்தை வழிபடுவோருக்கு வேண்டியது கிடைக்கும். திருமணம் கைகூடும். இழந்த பொருளை மீட்பர். எல்லா நலனும் கிட்டும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு சிவராத்திரி, ஆடி, தை மாதங்களின் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பானவைகளாகும் . 

எல்லையறியா துவாரம்:

எல்லா வகையிலும் காமாட்சியம்மனை  ஒத்திருக்கிறது. கருவறையில் 'பிலாகாசம்' என்னும் எல்லையறியா துவாரம் அமைந்துள்ளது.  இக்காரணங்களால் இத்தலம் காஞ்சியில் காமாட்சி அம்மன் உறைந்த ஆதிகோயில் ஆதிபீடம் என்ற வழக்கத்தில் ஆதிபீடா பரமேஸ்வரி என்ற பெயர் வழங்கி வருகிறது. 

இதையும் படியுங்கள்:
லட்சியத்தை நோக்கிய பயணத்தில் அலட்சியங்கள் ஒரு பொருட்டல்ல!
Amman temple...

நாம் செய்ய வேண்டியது:

காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும்பொழுது எளிதாக சென்று வரும் இந்த கோயிலுக்கும் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆன்மீக சுற்றுலாவிற்காக நாம் அழைத்து செல்பவர்களிடமும் இந்த விபரத்தைக் கூறி, அவர்களையும் பார்வையிட வைத்து வணங்கி வரச்சொல்லலாம். 

அனைவரும் அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலை வணங்கி விட்டு வெளிவரும்போது மறக்காமல் அதன் பின்புறத்தில் எளிதில் சென்று வரும் தொலைவில் உள்ள  இந்தக் கோவிலுக்கும் செல்வதை நினைவில் நிறுத்த வேண்டும்.

பிறகு இங்கு வந்து வணங்கி அருள் பெற்று, காமகோடி அம்மன் காமாட்சியின் ஆதி பீடத்தையும் வணங்கி, சக்திலிங்க தரிசனம் பெற்று, பின்னர் சக்தி லிங்கத்தையே தியானித்து எல்லா நலமும் பெறுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com