திட்டை குருகோவில்
குருபகவானின் திருவருள் கிடைக்கும் தலங்களில் முதன்மையானது திட்டை குருகோவில். பொறு என்ற முத்திரை தனித்துவம். இந்த கோவிலுக்கு மட்டுமே உண்டு என்பது தனிச்சிறப்பாகும். நின்று கோல குருவே இங்கு மட்டுமே காண முடியும். இந்த தளத்தில் குருவுக்கு தனி சன்னதி உண்டு. சாமி சன்னதிக்கும் அம்பாள் சன்னதிக்கும் இடையே சன்னதி கொண்டு சோமஸ்கந்தர் அமைப்பில் அருள் தருகிறார். இந்த தல குரு பகவான் தெற்கு நோக்கி அருள் தரும். இந்த பகவானே பார்த்த மாத்திரத்திலேயே ஆனந்தம் கிடைத்து நம் மனதில் நாம் நினைத்த அனைத்தும் நமக்கு நிறைவேற செய்து ஓடுவார் இந்த திட்டை குரு பகவான்.
சப்த குருக்கள் உள்ள உத்தமர் கோவில்
திருச்சிக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உத்தமர் கோவிலில் சப்த குருக்கள் அருள் புரிகிறார்கள். மும்மூர்த்தியரோடும் முப்பெரும் தேவியர் அருள்தரும் சப்த குருக்கள் அருளால் தோஷம் நீங்கும் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள சப்த குருக்களை ஒரே சமயத்தில் வழிபட்டால் தோஷங்கள் அகல்வதோடு கல்வி செல்வம் புகழ் அனைத்தும் பெறலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது.
இந்த தலத்தில் ஏழு குரு பகவான் அருள் புரிவதாக ஸ்ரீகாண்டேயயா புராணம் கூறுகிறது. தேவ குருவான பிரகஸ்பதி அசுரகுரு சுக்கிரர் ஈசனுக்கு உபதேச ஞானகுரு சுப்பிரமணியர் குரு பிரம்மன் விஷ்ணு குரு வரதராஜ பெருமாள் சக்தி குரு சௌந்தரநாயகி சிவகுரு தக்ஷிணாமூர்த்தி என ஏழு குருக்கள் இந்த உத்தமர் கோவிலில் அருள் புரிகிறார்கள்.
புளியரை சதாசிவ மூர்த்தி கோவில்
புளியரை சதாசிவமூர்த்தி கோவிலில் கோவிலுக்கு செல்ல இருபத்தி ஏழுபடிகள் உள்ளன இந்த இருபத்தி ஏழு படிக்கட்டுகள் இருபத்தி ஏழு நட்சத்திரங்களாக பார்க்கப்படுகின்றன. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து இருபத்தி ஏழு படியில் வழியாக ஏறி சிவனை பூஜித்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். பொதுவாக சிவன் கோவிலில் தட்சிணாமூர்த்தி தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவர் சதாசிவ மூர்த்தி லிங்கத்திற்கும் வாசலில் உள்ள நந்திக்கும் இடையே தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கின்றார்.
சிவபெருமானுக்கும் நந்தி தேவருக்கும் இடையே ஸ்ரீ யோக தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளிப்பது வேறெந்த தலத்திலும் இல்லாத விசேஷ அம்சமாகும். நேர்கோட்டில் அமர்ந்து அருள் பாலிக்கும் மூவரையும் ஏக காலத்தில் ஒரே இடத்தில் இருந்தபடி தரிசிக்கலாம் மூலவராக சதாசிவமூர்த்தி விளங்கினாலும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு தலமாக பார்க்கப்படுகின்றது. யோக தக்ஷிணாமூர்த்தியின் திருப்பாதத்தின் அருகில் சதுர கல் ஒன்றில் ஒன்பது ஆவர்த்த பீடங்கள் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. அத்தனை கிரகங்களும் தென்முக தெய்வத்துக்கு கட்டுப்பட்டு இங்கே இருப்பதாக ஐதீகம்.