திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலின் ஹோமங்கமள் அவற்றின் பலன்கள்!

திருக்கடையூர் அபிராமி அம்மன்
திருக்கடையூர் அபிராமி அம்மன்

-ம. வசந்தி

றுபதாம் கல்யாணம் என்ற உடனே நம் எல்லோர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது திருக்கடையூர்தான். சரபோஜி மன்னர் ஆட்சிக் காலத்தில் பக்தர் ஒருவருக்காக அபிராமி அம்பாள் தை அமாவாசையை முழு பௌர்ணமியாக்கி அபிராமி அந்தாதி அருளச் செய்த தலம். இங்கிருக்கும் அமிர்தகடேஸ்வரர் லிங்கத்தில் எமன் வீசிய பாசக் கயிற்றின் தடத்தை இன்றும் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யும்போது பார்க்க முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் சுவாமி கோவில் நடைபெறும் ஹோமங்கள் மிக சிறப்பு வாய்ந்தவை அவற்றை தெரிந்து பற்றி

உக்ரரத சாந்தி பூஜைகள்.

59 முடிந்து 60 வயது ஆரம்பம்.

ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுள் 120 ஆகும். இதில் பாதிவயதான 60 வயதில்தான் பல்வேறு கண்டங்கள் வந்து ஒரு மனிதனுடைய ஆயுளை குறைக்கும் என்பதால் அந்த கண்டங்களிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டி இக்கோயிலுக்கு வந்து உக்ரரத சாந்தி செய்து தங்களுடைய ஆயுளை நீண்ட காலங்களுக்கு தொடர செய்வார்கள்.

சஷ்டியப் பூர்த்தி:

60 வயது முடிந்து 61 வது வயது முதல் நாளில் திருமணம். அதாவது குடும்பங்கள் எல்லாம் சேர்ந்து செய்யக் கூடியவை. தாய், தந்தையருடைய திருமணங்களை பிள்ளைகள் பார்த்து இருக்கமாட்டார்கள், அவர்களுடைய மகள், மகன்கள் சேர்ந்து பெற்றோர்களுக்கு இந்த 60- வது திருமணம் செய்துவைப்பார்கள். இதனால் சகல செல்வங்களும் கிடைக்கக்கூடிய பலன்கள் உண்டாகும்.

திருக்கடையூர் அபிராமி
திருக்கடையூர் அபிராமிImage credit - gkresidencytkdr.com

பீமரத சாந்தி : 69 முடிந்து 70 வயது ஆரம்பம். விஜயரத சாந்தி : 75 வயது.

ஆரோக்கியம், திடமான உடல் கட்டமைப்பு, பீமனை போல் ஆயுள் பெற்று ஆரோக்கியமாக வாழவேண்டும் என்பதால் இந்த பீமரத சாந்தி செய்யப்படுகிறது.

சதாபிஷேகம் : 80 வயது ஆரம்பம்85 வயது முடிய.

இந்த திருமணம் பேரன்கள், பேத்திகள், கொள்ளுபேரன்கள், கொள்ளுபேத்திகள். சேர்ந்து 80 வது வயதில் சதாபிஷேகம் (திருமணம்) செய்து வைக்கப்படுகிறது. இது குடும்ப விருத்திக்கு செய்யப்படுகிறது.

ஒரு ருத்ரஹோமம் செய்த பலன் 10 ஆயிரம் அஸ்வமேத யாக பலனை கொடுக்கும். வியாதி நிவர்த்தியாகும். ஜீவனம் மேலோங்கும், சிந்தனை வளரும், மனச்சாந்தி உண்டாகும். நல்ல வாக்கும் சாதுர்யமும், ஆயுள் விருத்தியும், குழந்தை செல்வமும் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திர ஹோமம்:

இது ஒவ்வொரு மனிதர்களும் அன்றைய தினத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறக்கிறார்களோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரம் ஆகும். பிறந்த நட்சத்திரத்தை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் பூஜைகள் செய்வதால் நன்மை உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
திருக்கடையூர் அபிராமி அம்மன்

ஆயுள் ஹோமம்: ஒரு வயது முதல் 100 வயது வரை.

ஆயுள் விருத்திக்கு செய்யப்படும் பூஜைக்கு ஆயுள் ஹோமம் என்று பெயர்.

கனகா அபிஷேகம் 90 வயதில் செய்யப்படுகிறது.

பூர்ணா அபிஷேகம் 100 வயதில் செய்யப்படுகிறது.

ஆயிரம் பிறை கண்டவர்கள்:

ஒரு பெரியவர் 80 வயதை கடந்துவிட்டால், அவர் பூரண வாழ்வு வாழ்ந்தாக கருதுகிறோம். அதாவது அவர் ஆயிரம் பிறை கண்டவர் என்று கூறி அவரை வணங்குகிறோம். இத்தகைய சிறப்புப் பெற்றவர்கள் இத்தலத்துக்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்கிறார்கள். 80 வயது கடந்தவர்கள் வணங்கத் தக்கவர்கள் என்று பரமாத்மா கண்ணபிரான் கூறியுள்ளார்.

இக்கோவில் மயிலாடுதுறையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் திருக்கடையூரில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com