
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம் நின்மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழுவெழ நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம்
திரள்நிறை யறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளியெழுந்தருளாயே