
கூவின பூங்குயில், கூவின கோழி, சருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளி, ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்கு
தேவ! நற்செறி கழல் தாளிணை காட்டாய் திருப்பெருந்துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே