

காஞ்சிபுரம் திருப்புட்குழி கிராமத்தில் அமைந்துள்ளது மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இது, திருமங்கை யாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பட்டதும் இராமாயண காலத்தில் ஜடாயு இராவணனுடன் போர் புரிந்து மோட்சம் அடைந்த க்ஷேத்திரமாகவும் உள்ளது.
தலபுராணம்
ராமர் வனவாசம் சேய்தபோது சீதையை இலங்கை வேந்தன் ராவணன் சிறை பிடித்துக் கடத்திச்சென்றான். அப்போது பறவைகளின் அரசரான ஜடாயு சீதையை மீட்க இராவணனிடம் போரிட்டார். இதில் அவர் சிறகுகளை இழந்த நிலையில் மரணத்தருவாயில் இருந்தார்.
அப்போது சீதையைத்தேடி அவ்வழியே வந்த இராமரிடம் நடந்த விருத்தாந்ங்களைக் கூறி உயிர் நீத்தார். ஜடாயுக்கு தன் கையாலேயே ஈமக்கிரியைகள் செய்து இராமர் மோட்சம் அளித்தார். ஜடாயுவுக்கு இராமர் ஈமக்கிரியைகள் செய்ததால் இந்த தலம் திருப்புட் குழி என பெயர் பெற்றது.
இக்கோவிலில் மூலவரின் விஜயராகவன் பெருமாள் ஜடாயுவை தன் தொடையில் வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு
இது 13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டது. சோழர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் இக் கோவிலுக்குச் திருப்பணி செய்துள்ளனர் மூன்று நிலை இராஜகோபுரத்துடன் இது கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் விஜயராகவப்பெருமாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
ஜடாயுவுக்கு இராமர் ஈமக் க்ரியைகள் செய்தபோது ஏற்பட்ட வெப்பம் தாங்காமல் சீதேவி இடப்புறமாகவும் இடப்புறம் இருந்த பூதேவி வலப்புறமாக வரும் மாறி அருள்பாலித்த தாக புராணங்கள் கூறுகின்றன.
இக்கோவிலில் பெருமாளுக்கு இடதுபுறம் தாயாரும் வலது புறம் ஆண்டாள் சன்னதியும் அமைந்திருப்பது சிறப்பாகும்.
அதிசயக் கல் குதிரை வாகனம்
அர்த்த மண்டபத்தில் ஆழ்வார் சன்னதிகள் உள்ளன. இத்தலத்தில் இராமானுஜர் தன்குருவான யாதவப்பிரகாசரிடம் வேதம் கற்றுள்ளார். ஜடாயு வுக்கு மோட்சம் அளித்த இராமர் இங்கு தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். அது ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் உள்ள கல்குதிரை வாகனம் அதிசயம் நிறைந்ததாகும். உண்மையான குதிரையைப் போன்று அசையும் அமைப்பை உடையது குதிரையின் தலைப்பகுதி. மேலும் கீழும் அசையும்படியாக வால் பகுதி அதற்கேற்ப அங்கும் இங்கும் இருக்கும்படி கால்கள் அடியெடுத்து வைப்பது போல் இருப்பது பிரமிக்க வைக்கிறது.
முன்னோர்கள் தர்ப்பணம் கொடுக்கும் தலமாகும். இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். சொத்து தகராறு, கோர்ட் வழக்குகள், பிரிந்த தம்பதியர் இத்தலபெருமாளை வழிபட மகிழ்ச்சியான வாழ்வு அமையும். பேச்சுக் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் கருவறை வாசலில் மணிகளை தொங்க விட்டு பெருமாளை வேண்டிக்கொள்கின்றனர்.
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த ஜடாயு தீர்த்தத்தில் நீராடி ஊறவைத்த பயரை மடியில் கட்டிக்கொண்டு செல்கிறார்கள். மறுநாள் அப்பயறு முளைத்தால் குழந்தை வரம் உண்டாகும் என நமபப்படுகிறது.
காஞ்சியிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 11கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
இந்த ஆலயத்தின் வழிபாட்டு ரகசியங்களை அறிந்துகொள்வதன் மூலம், நீண்ட நாட்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் மற்றும் சொத்துத் தகராறுகளால் அவதிப்படுபவர்கள், தங்களின் தோஷங்களை நீக்கி வாழ்வில் மனஅமைதியையும், குடும்ப ஒற்றுமையையும், புதிய நல்வாழ்வையும் உடனடியாகப் பெற முடியும்.