பக்திப் பெருக்குடன் ஜூலை: முக்கிய விசேஷங்கள் மற்றும் முகூர்த்த நாட்கள்...

ஆண்டின் ஏழாவது மாதமான ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வரும் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் பார்க்கலாம்.
ஜூலை விரத நாட்கள்
July Spiritual Events AI Image
Updated on

ஜூலை 1 : தேய்பிறை பிரதமை, அமிர்த யோகம், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

ஜூலை 2 : தேய்பிறை துவிதியை, சுபமுகூர்த்தம், திருவோண விரதம், தேவமாதா காட்சியருளிய தினம், திருப்பதி வேங்கடேசபெருமாளுக்கு புஷ்பாங்கி சேவை, சித்த யோகம்

ஜூலை 3 : தேய்பிறை திரிதியை, சித்த யோகம், சங்கடஹர சதுர்த்தி, திருத்தங்கல ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் ரதோத்ஸவம்.

ஜூலை 4 : தேய்பிறை சதுர்த்தி, அமிர்த யோகம், ஸ்ரீரங்கம், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூலை 5 : தேய்பிறை பஞ்சமி, சுபமுகூர்த்த நாள், சமயபுரம், காஞ்சிபுரம் இத்தலங்களில் அம்மனை வழிபட நன்று, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு அலங்காரத்திருமஞ்சன சேவை.

ஜூலை 6 : தேய்பிறை சஷ்டி, சஷ்டி விரதம், இன்று முருகனுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறந்தது.

ஜூலை 7 : தேய்பிறை சப்தமி, அஷ்டமி, சித்த யோகம், திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல்.

ஜூலை 8 : தேய்பிறை அஷ்டமி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஸ்ரீநரசிம்மர் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூலை 9 : தேய்பிறை நவமி, சித்த யோகம், சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிநது வைரவேல் தரிசனம், திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

ஜூலை 10 : தேய்பிறை ஏகாதசி, கார்த்திகை விரதம், சர்வ ஏகாதசி, சித்த யோகம்.

ஜூலை 11 : தேய்பிறை துவாதசி, அமிர்த யோகம், கூர்ம ஜெயந்தி, திருப்புல்லாணி, ஸ்ரீஜெகநாத பெருமாள், திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயண பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் இத்தலங்களில் அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூலை 12 : தேய்பிறை திரயோதசி, பிரதோஷம், சுபமுகூர்த்த நாள், மாத சிவராத்திரி, சித்த யோகம், நாட்டரசன் கோட்டை, ஸ்ரீகண்ணுடையநாயகி, இருக்கன்குடி மாரியம்மன் வழிபட நன்று.

ஜூலை 13 : தேய்பிறை சதுர்த்தசி, அமிர்த யோகம், போதயான அமாவாசை.

ஜூலை 14 : சர்வ அமாவாசை, சித்த யோகம், ராதநாதபுரம் கோதண்டராமர் புறப்பாடு.

ஜூலை 15 : வளர்பிறை பிரதமை, சந்திர தரிசனம், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் தெப்பம், சித்த யோகம், ராமநாதபுரம் கோதண்டராமர் சிம்ம வாகன உலா.

ஜூலை 16 : வளர்பிறை துவிதியை, அமிர்த யோகம், அமிர்தலட்சுமி விரதம், மதுரை மீனாட்சியம்மன் முளை கொட்டு விழா தொடக்கம்.

ஜூலை 17 : ஆடி மாத பிறப்பு, வளர்பிறை திரிதியை, சதுர்த்தி விரதம், தக்ஷிணாயன புண்ணி காலம், மிலட்டூர் விநாயகர் பெருமான் புறப்பாடு, மதுரை மீனாட்சி வெள்ளி அன்ன வாகன வீதியுலா.

ஜூலை 18 : வளர்பிறை சதுர்த்தி, கரிநாள், மதுரை மீனாட்சி வெள்ளி சிம்மாசனத்தில் புறப்பாடு, ராமநாதபுரம் கோதண்டராமர் சேஷ வாகனத்தில் பவனி.

ஜூலை விரத நாட்கள்
murugan paal abhishekam |விரத நாட்கள்AI Image

ஜூலை 19 : வளர்பிறை பஞ்சமி, சஷ்டி விரதம், கௌரி விரதம், அமிர்த யோகம், ஸ்கந்த பஞ்சமி, சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் உற்சவாரம்பம்.

ஜூலை 20 : வளர்பிறை சஷ்டி, சித்த யோகம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமுள் மூலவருக்கு அலங்கார திருமஞ்சன சேவை.

ஜூலை 21 : வளர்பிறை சப்தமி, அஷ்டமி, சித்த யோகம், திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் உற்சவாரம்பம்.

ஜூலை 22 : வளர்பிறை அஷ்டமி(ரெண்டுபட்டு வருகிறது), சித்த யோகம், நவமி, ராமநாதபுரம் ஸ்ரீகேதண்டராமர் ரதோத்ஸ்வம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.

ஜூலை 23 : வளர்பிறை நவமி, சித்த யோகம், உபேந்திர நவமி, திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராமாவதாரம் காட்சி, மதுரை மீனாட்சி தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு.

ஜூலை 24 : வளர்பிறை தசமி, சித்த யோகம், மதுரை மீனாட்சி சட்டத்தேரில் பவனி.

ஜூலை 25 : வளர்பிறை ஏகாதசி, சர்வ ஏகாதசி, கோவர்ததன விரதம், சித்த யோகம், சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் பூம்பல்லக்கில் பவனி.

இதையும் படியுங்கள்:
மே மாத ஆன்மீக காலண்டர்: விரத நாட்கள், முகூர்த்த தேதிகள் மற்றும் கோவில் உற்சவங்கள்!
ஜூலை விரத நாட்கள்

ஜூலை 26 : வளர்பிறை துவாதசி, பிரதோஷம், கரிநாள், அமிர்த யோகம், வாஸூதேவ துவாதசி, திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காளிங்க நர்த்தனம்.

ஜூலை 27 : வளர்பிறை திரியோதசி, சித்த யோகம், வாஸ்து நாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை வாஸ்து செய்ய நன்று), சித்த யோகம்.

ஜூலை 28 : வளர்பிறை சதுர்த்தசி, பவித்திர சதுர்த்தசி, சித்த யோகம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

ஜூலை 29 : வளர்பிறை பௌர்ணமி, சித்த யோகம், சேலம் செவ்வாய்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகன பவனி.

ஜூலை 30 : வளர்பிறை பிரதமை, திருவோண விரதம், சித்த யோகம், சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வெள்ளி விமானத்தில் புறப்பாடு.

இதையும் படியுங்கள்:
ஜூன் மாத ஆன்மீக காலண்டர்: விரத நாட்கள், முகூர்த்த தேதிகள்!
ஜூலை விரத நாட்கள்

ஜூலை 31 : வளர்பிறை துவிதியை, சித்த யோகம், படைவீடு ரேணுமாம்பாள் புறப்பாடு, வடமதுரை சௌந்திரராஜ பெருமாள் வசந்த உற்சவம்.

logo
Kalki Online
kalkionline.com