விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை!

மகாமந்திர பூஜை...
மகாமந்திர பூஜை...

ந்திரம் என்பது சக்தி வாய்ந்தது. மந்திரத்தை முறைப்படி உச்சரித்து தெய்வங்களை மனதார பூஜித்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் திருப்புகழ். முருகப்பெருமானே “திருப்புகழ் பாடுக” என நூலுக்குப் பெயரும் சூட்டி “முத்தைத்தரு” என முதலடியினையும் எடுத்துக் கொடுக்க ஸ்ரீமத் அருணகிரிநாதரால் பாடப்பெற்ற பெருமை உடையது திருப்புகழ். திருப்புகழான மகாமந்திரத்தை உச்சரித்து பூஜித்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நிச்சயம். இத்தகைய மகாமந்திரமான திருப்புகழைக் கொண்டு திருப்புகழ் மகாமந்திர பூஜையினை திருப்புகழ் வித்தகர் ஆன்மிக அன்பர் மதிவண்ணன் அவர்கள் நிகழ்த்தி வருவதாக அறிந்து அவரைச் சந்தித்தோம். இவர் திருப்புகழ், இராமாயணம், மகாபாரதம், அபிராமி அந்தாதி, பன்னிரு திருமுறைகள் என அனைத்து பக்தி இலக்கியங்களைப் பற்றியும் மடைதிறந்த வெள்ளம் போல உரையாற்றக்கூடிய அபார சக்தி படைத்தவர். தனது ஆன்மிக எழுத்துகளுக்காக பல விருதுகளை வென்றவர்.

திருப்புகழ் திலகம் மதிவண்ணன் அவர்களுடன் உரையாடியபோதுதான் நிகழ்த்தி வரும் திருப்புகழ் மகாமந்திர பூஜையைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

“முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுக்க அருணகிரிநாதர் அவர் புகழைப் பாடி அருளியது திருப்புகழ். திருப்புகழில் முருகப்பெருமானை மட்டுமின்றி சகல தெய்வங்களையும போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார் அருணகிரிநாதர். திருப்புகழில் விநாயகப் பெருமான், சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, ஐயப்பன், அனுமன், முருகப்பெருமான் ஆகிய ஏழு தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். விநாயகப் பெருமான், சிவபெருமான், அம்பாள், மகாவிஷ்ணு, ஐயப்பன், அனுமன் ஆகியோரின் படங்களுக்கு மத்தியில் முருகப்பெருமானின் படத்தை வைத்து திருப்புகழ் மகாமந்திர பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையில் எழுவித தெய்வங்களுக்கு உரிய ஏழு வித மலர்களைச் சமர்ப்பித்து ஏழு வித நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது இந்த பூஜையின் தனிப்பெரும் சிறப்பாகும்.

விநாயகருக்கு உகந்த அருகம்புல், ஈசனுக்கு உகந்த வில்வம், அம்பாளுக்கு உகந்த செண்பகம், முருகப் பெருமானுக்கு உகந்த செந்தாமரை, மகாவிஷ்ணுவிற்கு உகந்த பவழமல்லிகை, ஐயப்பனுக்கு உகந்த கதம்பம், அனுமனுக்கு உகந்த துளசி என ஏழு வகைப் பூக்களையும் விநாயகருக்கு சுண்டல், ஈசனுக்கு ஜீரக சாதம், அம்பாளுக்கு பாயாசம், முருகப்பெருமானுக்குத் தினைமாவு, மகாவிஷ்ணுவிற்குப் புளியோதரை, ஐயப்பனுக்கு நெய்யப்பம், அனுமனுக்கு மிளகுவடை என ஏழு வகையான நைவேத்தியங்களையும் படைத்து இந்த பூஜை நடத்தப்படுகிறது. ஏககாலத்தில் ஏழு தெய்வங்களையும் ஏகாந்தமாக பூஜை செய்வதால் கிடைக்கும் பலனோ ஏராளம். குறிப்பாக தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் திருப்புகழ் மகாமந்திர பூஜையினைச் செய்து சங்கல்பம் செய்து கொண்டால் எண்ணியது கைகூடும் என்பது திண்ணம்.

இதையும் படியுங்கள்:
அடர்த்தியான கண் இமைகளுக்கு இயற்கையான அழகு குறிப்புகள் சில…
மகாமந்திர பூஜை...

திருமணம் கைகூடாமல் இருப்பவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள், கடன் தொல்லையால் அவதியுறுபவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள், சொந்த வீடு அமையவில்லையே என்று வருத்தப்படுபவர்கள், கோர்ட் கேஸ் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள் என எவரும் ஒரு முறை இந்த மகாமந்திர பூஜையினைச் செய்தாலோ அல்லது இந்த பூஜையில் கலந்து கொண்டாலோ அவர்களுடைய பிரச்சினைகள் யாவும் முருகன் அருளால் விரைவில் தீரும் என்பது கண்கூடான உண்மை.”

தற்போது இவர் விரும்பி அழைப்பவர்களின் இல்லங்கள், புதுமனைப் புகுவிழாக்கள் மற்றும் கோயில்களில் ஒன்றரை மணி நேரம் கொண்ட திருப்புகழ் மகாமந்திர பூஜையினைச் செய்து கொடுக்கிறார். துபாய், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை முதலான நாடுகளுக்கும் சென்று இவர் திருப்புகழ் மகாமந்திர பூஜையினைச் செய்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com