
திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாத பிரம்மோற்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது நவம்பர் 10ஆம் தேதி கார்த்திகை மாத பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பதினெட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது தினமும் காலை இரவு இருவேளையிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப் படுகிறது. பக்தர்களுக்கு சுகங்களை வாரி வாரி வழங்குவதால் திருச்சானூர் சுகபுரி எனப்படுகிறது. தாயார் அலமேலு மங்கை என்றும் வணங்கப்படுகிறார். 10 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல் மங்கை தாயார். கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் கொண்டு அருங் காட்சியளிக்கிறாள்.
மகாலட்சுமி திருமலையில் திருவேங்கடவனின் திரு மார்பில் குடியேறவும், தனது அம்சமான பத்மாவதி கீழ் திருப்பதியில் எழுந்தருளும் மாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிப்பவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் பெற்று அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
பத்மாவதி சீனிவாசன் திருமண வைபோகத்தில் கருவேப்பிலையும் கனகாம்பரமும் சேர்க்கப்படாததால் தாயாருக்கும் பெருமாளுக்கும் ஊடல் ஏற்பட்டு தாயார் கீழ் திருப்பதியில் அமர்ந்தாராம். எனவே இன்றும் திருப்பதியில் கனகாம்பரம் மலரையும் கருவேப்பிலையும் எதற்கும் சேர்ப்பதில்லை.
தல தீர்த்தம் பத்ம ஸரோவர் ஆகும்.பஞ்சமி தீர்த்தம் எனும் விழா இத் தீர்த்தத்தில் விசேஷமாக கொண்டாடப் படுகிறது. தினமும் இரவில் திருமலையிலிருந்து திருவேங்கடவன் இறங்கி வந்து அலர்மேல் மங்கை தாயார் உடன் ஏகாந்தமாக இருந்துவிட்டு பின் விடிவதற்குள் திருமலைக்கு செல்வதாக ஐதிகம்.
திருமலையில் அருள் பாலிக்கும் ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது வழக்கம். திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு கார்த்திகை மாத பிரம்மோற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
நடப்பாண்டு வரும் நவம்பர் 10ஆம் தேதி கார்த்திகை மாத பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி பதினெட்டாம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை இரவு இரு வேலைகளிலும் தாயாரின் வாகன சேவை நடத்தப்படுகிறது.
சேஷ வாகனம், ஹம்சவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கல்பவிருட்ஷ வாகனம், கஜவாகனம், என தினசரி தாயார் எழுந்துருளி அருள் பாலிக்கிறார். சீனிவாச பெருமாளுக்கு கருட வாகன சேவை எப்படி விசேஷமானதோ அதேபோல பத்மாவதி தாயாருக்கு கஜவாகன சேவை சிறப்பானது. இந்த நாளில் ஏழுமலையான் கோவிலில் இருந்து மூலவருக்கு சமர்ப்பிக்கப்படும் லட்சுமி காசு மாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு திருச்சானூருக்கு கொண்டுவரப்பட்டு பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பிக்கப்படும். இதனை அணிந்து கொண்டு கஜ வாகனத்தில் உலா வருவார்.
கார்த்திகை மாத பஞ்சமி தீர்த்த ஸ்தானத்தின்போது திருமலையில் இருந்து பத்மாவதிக்கு பட்டுப்புடவை தங்கச் செயின் மஞ்சள் குங்குமம் அன்னபிரசாதங்கள் சீர்வரிசையாக வருகின்றன. அவை திருச்சானூர் மாட வீதிகளில் யானை மீது ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பின் தாயாருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. கார்த்திகை மாதத்தில் தாயாருக்கு குங்குமத்தால் செய்யப்படும் லட்சார்ச்சனை வைபவம் தனி சிறப்புடையது.
வைகரீ ரூபாய அலர்மேல் மங்காய நமஹ எனும் மந்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. வைகுண்டத்தில் நாராயணனின் திருமார்பில் உறையும் மகாலட்சுமியே திருச்சானூரில் பத்மாவதி தேவியாய் அருள்கிறாள். பத்மாவதி ஸ்ரீனிவாசன் திருமண செலவுக்கு பணம் இல்லாததால் குபேரனிடம் ஒரு கோடியே 14 லட்சம் ராமநிஷ்காம பொற்காசுகளை கடனாக பெற்று கலியுக முடியும் வரை கடனுக்கு வட்டி செலுத்துவதாக வாக்களித்தார். சீனிவாசன் மகாலட்சுமி திருமலையில் திருவேங்கடவரின் திரு மார்பிற்கு குடியேறவும் தனது அம்சமான பத்மாவதி கீழ் திருப்பதியில் திருச்சானூரில் எழுந்தருளும் மாறும் வரம் பெற்றதாக வரலாறு. பத்மாவதியை தரிசிபவர்கள் வேங்கடவன் ஆணைப்படி சகல செல்வங்களும் பெற்று அதில் ஒரு பகுதியை வேங்கடவனுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். வட்டியை அளந்து கொடுக்கும் பொறுப்பை ஏற்ற கோவிந்தராஜ் பெருமாளை இன்றும் காசு அளக்கும் படியுடன் கீழ் திருப்பதியில் தரிசிக்கலாம்.
திருச்சானூருக்கு அருகில் உள்ள கல்யாண வனத்தில் பத்மாவதி தாயார் திருமணத்திற்காக மஞ்சள் அரைத்த யந்திரகல்லை இன்றும் காணலாம். கல்யாண விருந்து தயாரானவுடன் சீனிவாசரின் யோசனைப்படி அந்த பிரசாதங்களை அகோபிலம் நரசிம்மருக்கு இருவரும் அந்த திசை நோக்கி வைத்து நிவேதித்தார்களாம்.