உடலில் எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இல்லாதுபோனால் என்ன ஆகும் தெரியுமா?

electrolytes
electrolytes
Published on

லக்ட்ரோலைட்டுகள் (மின் அயனிகள்) என்றால் என்னவென்று தெரியுமா? எலக்ட்ரோலைட்டுகள் எனப்படும் கனிமங்கள், உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. மனித உடலில் பல வகையான மினரல்கள் உள்ளன. அவற்றில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், குளோரைடு, மெக்னீசியம், பாஸ்பேட், பை கார்பனேட் போன்றவை முக்கியமான மினரல்கள் ஆகும். இவை சமநிலையில் இல்லாமல் போகும்போது உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.

எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையின்மையின் முக்கியமான அறிகுறிகள்: உடல் வறட்சி, தசைகளில் பிடிப்புகள் மற்றும் பலவீனம், தலைவலி, தலை சுற்றல், உடல் சோர்வு, உடலில் அங்கங்கே வீக்கம், எலும்பு சம்பந்தமான பிரச்னைகள், சிறுநீரகப் பிரச்னை, மனக்குழப்பம், மனச்சோர்வு, வலிப்பு, இரத்த அழுத்தத்தில் மாற்றம் மற்றும் இதயத்துடிப்பில் தொந்தரவுகள் போன்றவை இதன் அறிகுறிகள்.

எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இல்லாமல் போகும்போது, வயிற்றுப்போக்கு, வாந்தி, மிக அதிகமாக வியர்ப்பது, தீவிரமான தொற்றுகள், சுவாசக் கோளாறு, இதயத் துடிப்பில் மாற்றம் போன்றவற்றை ஏற்படும்.

இயற்கையாகவே எலக்ட்ரோலைட்சை சம நிலையில் வைத்திருக்க உதவும் உணவு வகைகளும் பானங்களும்:

* இனிப்பு அதிகம் இல்லாத இளநீரை குடிக்க வேண்டும். ஒரு கிளாஸ் இளநீரில் 350 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது.

* வாழைப் பழங்களில் நம்ப முடியாத அளவுக்கு எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இதில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. உடல் சோர்ந்திருக்கும்போது ஒரு பெரிய வாழைப்பழம் சாப்பிட்டால் உடனே தெம்பும், சக்தியும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் இத்தனை நன்மைகளா?
electrolytes

* பால் பொருட்களில் கால்சியமும் சோடியமும் உள்ளன. மேலும் பீன்ஸ், சோயா உணவுகள், பாதாம் பருப்பு போன்றவை உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் வைத்திருக்கும்.

* கோழிக்கறியில், வான்கோழியில், பீன்ஸ், லெண்டில்ஸ் போன்றவற்றில் எலக்ட்ரோலைட்டுகளை அதிகரிக்கும் பொட்டாசியம், சோடியம் உள்ளன.

* அவகோடா பழத்தில் நிறைய பொட்டாசியம் சத்து உள்ளது.

* எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மாதுளை ஜூஸ் இவற்றில் உடலுக்குத் தேவையான அத்தனை எலெக்ட்ரோலைட்டுகளும் இருக்கின்றன. காலை உணவுடன் சேர்த்து இவற்றில் ஏதேனும் ஒரு ஜூஸ் குடிக்க வேண்டும்.

* தர்பூசணி பழத்தில் உடலுக்குத் தேவையான அளவுக்கு எலெக்ட்ரோலைட்டுகள் உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com