நம்பவே முடியல! மேகங்களுக்கு நடுவே ஒரு கோவில் - நைனாமலை வரதராஜ பெருமாளின் விஸ்வரூபம்!

Nainamalai  Varadharaja perumal temple
Nainamalai Varadharaja perumal temple
Published on
deepam strip
deepam strip

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நைனாமலை (Nainamalai) என்ற செங்குந்தர் மலை மீது அமைந்துள்ள பழமையான வைணவ ஸ்தலம் ஆகும். இது கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்தலமாக வழங்குகிறது. இந்த கோவிலில் 3 ஆயிரத்து 700 படிகள் ஏறி பெருமாளை வணங்க வேண்டும். இதனை 'சின்ன திருப்பதி' என அழைக்கிறார்கள். புரட்டாசி மாதம் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வரதராஜ பெருமாள் குவலயவல்லி தாயாருடன் அருள் பாலிக்கிறார். இந்து புராணப்படி, பல யுகங்களாக இந்த கோவில் இருந்து வருகிறது. இங்கு சித்தர்கள், ரிஷிகள் தவம் செய்த இடமாகும். இங்கு தெலுங்கு பேசும் நாயக்கர்கள் ஆண்டு வந்ததால், இந்த இடம் 'நைனாமலை' என அழைக்கப்பட்டது.

நைனா என்றால் தந்தை எனப் பொருள்படும். நயன மகரிஷி என்பவர் இங்கு தவம் செய்த காரணத்தால் நைனா மலை என பெயர் ஏற்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். இங்குள்ள பெருமாளை வழிபட்டால் திருப்பதி சென்ற பலன் கிடைக்கும். எனவே, இதனை சின்ன திருப்பதி என அழைக்கிறார்கள். இந்த மலையின் உயரம் 2600 அடி. 3700 படிகள் கொண்டது. 120 அடி உயரம் கொண்ட ஒரே பாறையில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மலையில் 108 தீர்த்தங்கள் முன்பு இருந்தது. இப்போது வற்றாத அமையா தீர்த்தம், அரிவாள் பாழி தீர்த்தம், பெரிய பாழி தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் மட்டுமே உள்ளன. இங்குள்ள பெருமாளை சூரியன் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இந்திரன் இடி ரூபமாக இந்த இடத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டதாக ஐதீகம். சித்தர்கள், ரிஷிகள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பிரம்ம புராணத்தில் 16வது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோவில் பல்லவ மன்னனால் கட்டப்பட்டது. இந்திர ஜலம், பத்மஜலம், யாதவ ஜலம், நைனா ஜலம் என்ற நான்கு யுகங்களாக இருந்து வருகிறது.

1939 ல் கோவில் சுற்று பிரகாரம் கட்டப்பட்டது. வரதராஜ பெருமாள் சிலைக்கு 'மாயவர்' என்ற பெயரும் உண்டு. ஆடி மாதம் சனிக்கிழமை கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கு உள்ள திருமஞ்சன தீபம் மிகவும் பிரசித்தி பெற்றது. அடிவாரத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மேலே 3700 படிகள் ஏற சுமார் 3 மணி நேரம் ஆகும். கீழே இறங்க ஒன்றரை மணி நேரம் ஆகும்.

இங்குள்ள மண்டப தூண்களில் ஜடாமுனி சித்தர், பிரான சித்தர், குரு லிங்க சித்தர் உருவங்கள் உள்ளன. இன்றும் சித்தர்கள் ரிஷிகள் வருவதாக கூறப்படுகிறது.

பெருமாள் சன்னதிக்கு எதிரே கருடாழ்வார் காணப்படுகிறார். அடுத்து மகா மண்டபம் ராமர், சீதை, லட்சுமணன், நவநீதகிருஷ்ணன், ராதா, ருக்மணி சன்னதிகள் உள்ளன. இங்கு ஆண்டாளுக்கு தனி சன்னதி உள்ளது. தல விருட்சம் நெல்லி மரம் ஆகும். இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். ஆஞ்சநேயர் மண்டபத்தில் இருந்து 150 படிகள் சென்றால் கோவிலை அடையலாம்.

முதியவர்கள், பெண்கள் இதனை பயன்படுத்துகின்றனர். மாசி திருவிழா புரட்டாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். அஷ்டலஷ்மி ஹோமம், 180 திருவிளக்கு பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த கோவிலில் திருமஞ்சன தீபம் அதிக அளவில் ஏற்றப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் தோறும் விசேஷமாக இருக்கும். விழா காலங்களில் மலை அடிவாரம் வரை பஸ் வசதி உள்ளது.

ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் கூட்டம் அதிகமாக காணப்படும். வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

நாமக்கல்லில் இருந்து பத்து கிலோ மீட்டர் சேந்தமங்கலத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் ராசிபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் சேலத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நைனாமலை உள்ளது.

இதையும் படியுங்கள்:
மூலிகை தைலத்தைக் கொண்டு தங்கம் தயாரித்த சித்தர்! அச்சித்தரே அருள்பாலிக்கும் அதிசய கோவில்!
Nainamalai  Varadharaja perumal temple

தை முதல் ஆனி மாதம் வரை 6 மாதம் சூரிய ஒளி மூலவர் மீது விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தை பாக்கியம் பெறவும், திருமண தடை அகலவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்கு எண்ணற்ற மக்கள் வருகை தருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com