பக்தி Vs. மகிழ்ச்சி: இந்தியாவின் தீப நகரங்கள்... வாரணாசி Vs. மைசூர்! எது அதிக பிரபலம்?

varanasi mysore city of lights
varanasi mysore cities of lightsImg credit: AI Image
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on
deepam strip
deepam strip

இந்தியாவில் பல நகரங்கள் தங்களின் தனித்துவமான பாரம்பரியம் மற்றும் விழாக்களால் சிறப்புப் பெயர்கள் பெற்றுள்ளன. அவற்றில் 'தீப நகரம்' என்றழைக்கப்படுகிற இரண்டு முக்கிய நகரங்கள் வாரணாசி மற்றும் மைசூர் ஆகும். இவ்விரு நகரங்களும் ஒளி விழாக்களால் பிரபலமானவை. ஆனால், அவற்றின் வரலாறு, ஆன்மீக பின்னணி மற்றும் விழா கொண்டாட்ட முறைகள் வேறுபட்டவை.

வாரணாசி ஆன்மீக ஒளியின் நகரம்: உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியாக வாழப்பட்ட புனித நகரங்களில் ஒன்றாக வாரணாசி கருதப்படுகிறது. கங்கை நதியில் புனித நீராடுதல் பாவ நிவாரணம் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாலை நேரத்தில் நடைபெறும் கங்கை ஆரத்தி விழா ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. பாரம்பரிய இசை, யோகா, சமய சடங்குகள் போன்றவை இந்நகரின் அடையாளங்களாகும். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் இந்து சமயத்தின் முக்கியத் தலமாக விளங்குகிறது. குறிப்பாக, தேவ தீபாவளி அன்று கங்கை கரையிலுள்ள படிக்கட்டுகள் முழுவதும் ஆயிரக்கணக்கான எண்ணெய் விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

அந்த ஒளிக் காட்சி நகரை முழுவதும் ஆன்மீக ஒளியில் மூழ்கச் செய்கிறது. இதனால் வாரணாசி 'தீபங்களின் நகரம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒளி என்பது ஆன்மீகத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

மைசூர் – விழாக்கோல ஒளியின் நகரம்: மைசூர் அரண்மனை இந்தியாவின் அழகிய அரண்மனைகளில் ஒன்று. மைசூர் தசரா கர்நாடகாவின் மாநில விழாவாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத் தலைநகராக அறியப்படுகிறது. இங்கு நடைபெறும் தசரா விழா உலகப் புகழ்பெற்றது. தசரா காலத்தில் மைசூர் அரண்மனை இலட்சக்கணக்கான மின் விளக்குகளால் அலங்கரிக்கப் படுகிறது. இரவு நேரத்தில் அரண்மனை பொற்கொலு போல ஒளிரும். இங்கு ஒளி என்பது விழா மகிழ்ச்சி மற்றும் அரச மரபின் பெருமையை வெளிப்படுத்துகிறது. இது அரண்மனை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. மைசூர் சந்தனப் பொருட்கள் மற்றும் அகர்பத்தி தயாரிப்பில் புகழ் பெற்றது. சுத்தம் மற்றும் திட்டமிடப்பட்ட நகரமைப்புக்காக மைசூர் பாராட்டப்படுகிறது. அரண்மனை, பூங்கா, அருங்காட்சியகங்கள் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: எல்லாம் மாயை அல்ல!
varanasi mysore city of lights

இரண்டிற்குமான ஒப்பீடு:

வாரணாசியில் ஒளி ஆன்மீக பக்தியைக் குறிக்கிறது; மைசூரில் ஒளி விழாக்கோல மகிழ்ச்சியை குறிக்கிறது.

வாரணாசியில் எண்ணெய் விளக்குகள் முக்கியம்; மைசூரில் மின்விளக்குகள் முக்கியம்.

வாரணாசி புனித யாத்திரை நகரம்; மைசூர் கலாச்சார மற்றும் சுற்றுலா நகரம்.

வாரணாசி ஆன்மீக மற்றும் சமய மரபில் முன்னிலை வகிக்கிறது; மைசூர் கலாச்சாரம், விழா மகிழ்ச்சி மற்றும் அரச மரபில் சிறந்து விளங்குகிறது.

இரு நகரங்களும் இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் ஒளிமிகு நகரங்களாக திகழ்கின்றன. வாரணாசி மற்றும் மைசூர் ஆகிய இரு நகரங்களும் ஒளியின் மூலம் உலகிற்கு இந்திய பாரம்பரியத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. ஆன்மீக ஒளியால் பிரபலமான வாரணாசியும், விழாக்கோல ஒளியால் பிரபலமான மைசூரும் தத்தமது சிறப்பினால் 'தீப நகரம்' என்ற பெயருக்கு தகுதியானவை. நம் நாட்டின் பாரம்பரியம் ஒளியால் என்றும் பிரகாசிக்கட்டும்.

logo
Kalki Online
kalkionline.com