கஷ்டங்களைப் போக்கும் ‘கனகபுஷ்பராகம்’ என்னென்ன பயன்கள் இருக்கு தெரியுமா?

Kanagapushparagam
Kanagapushparagam BenefitsImage Credits: Adobe Stock

‘கனகபுஷ்பராகம்’ என்னும் பெயர் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. ‘கனகா’ என்பதற்கு தங்கம் என்றும் ‘புஷ்பா’ என்பதற்கு மலர் என்றும் பொருள். இந்த கல் பார்ப்பதற்கு தங்கத்தினால் ஆன மலரைப்போல இருப்பதால் இப்பெயர் வந்தது. கனகபுஷ்பராக கல்லை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால், தாமரை மலர் வாசனை வருமாம். அதுவே உண்மையான கனகபுஷ்பராகத்தை கண்டு பிடிக்கும் முறை என்று அகத்தியர் அவர் நூலிலே கூறிப்பிட்டுள்ளார்.

கனகபுஷ்பராகம் பார்ப்பதற்கு எழுமிச்சைப்பழம் நிறத்தில் இருக்கும். இதை ஆங்கிலத்தில் Yellow sapphire என்று அழைப்பார்கள். ஜாதகத்தில் குரு பலமில்லாமல் இருப்பவர்கள் இதை அணியக்கூடாது. அவர்களை தவிர்த்து யார் வேண்டுமானாலும் இந்த கல்லை அணியலாம். இந்த கல்லில் கரும்புள்ளிகள் இல்லாமல், உடைந்து இல்லாமல் பார்த்து வாங்குவது நல்லது. புஷ்பராகம் அதிக கடினத்தன்மை கொண்டதால், அதிக நாள் பயன்படுத்தினாலும் பளபளப்பு குன்றாது. கனகபுஷ்பராகம் இந்தியாவில் தமிழ்நாடு, ஒரிசா ஆகிய இடங்களில் விளைகிறது. இந்தியா, ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.

கனகபுஷ்பராகம் குருவிற்காக போடக்கூடிய நவரத்தின கல்லாகும். இந்தக் கல்லை போட்டுக்கொள்வதால் ஏற்படும் பலன்கள், குழந்தை வேண்டும் என்பதற்காக, குடும்பத்தில் பிரச்சனை வராமல் இருக்க, செல்வ செழிப்பிற்காக, அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்காக போட்டு கொள்வார்கள்.

தனுசு, மீனம், விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கல்லை பயன்படுத்துவார்கள். புணர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணிவார்கள். 3, 12, 21, 30 ஆகிய எண்ணில் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள். கனகபுஷ்பராகத்தை ஆள்காட்டி விரலில் அல்லது மோதிர விரலில் அணிய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
கோபுரத்தில் ஏற்றும் கோமேதகத்தின் பலன்கள் பற்றித் தெரியுமா?
Kanagapushparagam

கனகபுஷ்பராகத்தை அணியும்போது வியாழக்கிழமை காலையில் வளர்பிறை நாளன்று போடுவது சிறந்ததாகும். குரு ஓரையில் போடுவதும் நல்லது. வடக்கு திசையை பார்த்து போட்டுக்கொள்வது சிறந்தது. வீட்டில் உள்ள பெரியவர்களின் கையால் அணிந்து கொள்வது நல்லது. வெள்ளி, தங்கம் எதில் வேண்டுமானாலும் செய்து போட்டுக்கொள்ளலாம். இதற்கு பிளேட்டினம் ஒத்து வராது. வயிறு சம்மந்த பிரச்சனை உள்ளவர்களும் கனகபுஷ்பராகத்தை அணியலாம்.

இந்த கல்லை அணிவதால் வாழ்க்கையில் ஒரு பாசிட்டிவான பாதையை காட்டும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். படிப்புக்கு குரு மிகவும் முக்கியமானவர் என்பதால் மாணவர்கள் அணியும்போது, நல்ல படிப்பை கொடுக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com