உலகின் முதல் 3D அச்சிடப்பட்ட இந்து கோயில் - விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டம்!

ஸ்ரீபாத காரிய சித்தேஷ்வர ஸ்வாமி 3டி கோயில் ...
ஸ்ரீபாத காரிய சித்தேஷ்வர ஸ்வாமி 3டி கோயில் ...

தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகத்தின் அற்புதமான இணைப்பில் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகில் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள புருகுபள்ளியில் உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட  (printed)  கோயில் கட்டப்பட்டுள்ளது. ஹைதராபாதில் உள்ள கட்டுமான நிறுவனமான அப்சுஜா இன்ஃப்ராடெக் மற்றும் 3டி அச்சிடப்பட்ட கட்டுமான நிறுவனமான சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் கூட்டணியில் இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. IIT ஹைதராபாத்தின் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே.வி.எல்.சுப்பிரமணியம் மற்றும் அவரது ஆராய்ச்சி குழுவினரால் வடிவமைகப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது.

பாரம்பரியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தின் சங்கமமாகத் திகழும் இந்த முப்பரிமாண அச்சிடப்பட்ட கோயில் 3800 சதுர அடி பரப்பளவில் 35.5 அடி உயரம் கொண்ட 3  கோபுரங்களைக் கொண்டுள்ளது.

நவீன ரோபோட்டிக்ஸ் கட்டுமான 3டி பிரிண்டிங் வசதியைப் பயன்படுத்தி விநாயகருக்கு மோதக வடிவ சன்னதி, சிவபெருமானுக்கு சதுர வடிவ சன்னதி, தாமரை வடிவில் பார்வதி தேவிக்கு ஒரு சன்னதி என வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயில் 3டி பிரிண்டிங் வசதியுடன் உள்நாட்டு பொருட்கள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஆனால் தூண்கள் பலகைகள் மற்றும் தரையமைப்பு பாரம்பரிய கட்டிட நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளன. கோயிலை கட்டி முடிக்க 6 மாதங்கள் ஆகிள்ளயுன. இக்கோயில் மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றத்தையும் தாங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சவாலாகக் கருதப்பட்ட கட்டமைப்புகளை நிர்மாணிப்பதில் 3டி பிரிண்டிங்கின் சாத்தியமான பயன்பாடுகளை விளக்கும் கலங்கரை  விளக்கமாக இந்தக் கோயில் திகழ்கிறது.

ஸ்படிக லிங்கம் ...
ஸ்படிக லிங்கம் ...

இந்த ஸ்ரீபாத காரிய சித்தேஷ்வர ஸ்வாமி 3டி கோயில் தேவஸ்தானம் ஹைதராபாதிலிருந்து 85 கிமீ தொலைவில்  உள்ள அதி நவீன கேட்டட் கம்யூனிடி வில்லாக்கள் அடங்கிய சார்விதா மெடோஸ் வளாகத்தில் உள்ளது. இந்த இடம் இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு அமைதியான சூழ்நிலையையும் தெய்வீக உணர்வையும் ஒருங்கே அளிக்கிறது. இக்கோயிலில் உள்ள  ஸ்படிக லிங்கம் அனைவரையும் ஈர்க்கிறது. காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
மேக்கப் பிரஷ்கள்…பராமரிக்கும் வழிமுறைகள்!
ஸ்ரீபாத காரிய சித்தேஷ்வர ஸ்வாமி 3டி கோயில் ...

வழக்கமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அடைய முடியாத வடிவங்களை 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாக செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இது மனிதனின் புத்திக் கூர்மைக்கும் பக்திக்கும் பிரமிக்க வைக்கும் சான்றாக உள்ளது. இதன் கட்டடக்கலை அதிசயத்தைக் காணும்போது பாரம்பரியமும் தொழில்நுட்பமும் இணைந்து எதிர்கால முயற்சிகளுக்கு மேலும் வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com