
மனிதர்களின் குணங்களை அவர்களின் உடல் அமைப்பை வைத்தே கணிக்க முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? மச்சம், கால் விரல்களின் அமைப்பு போன்றவற்றை வைத்து எளிதாக கணிக்க முடியும். மனிதர்களின் கால் விரல்கள் ஒவ்வொரு விதமும் ஒவ்வொரு குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறது. அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1.கட்டை விரலும் அதற்கு அடுத்து இருக்கும் இரண்டு விரல்களும் சமமாக இருக்கும். அதன் பிறகு இருக்கும் இரண்டு விரல்களும் ஒன்றுக்கு பின் ஒன்றாக அமைந்திருக்கும். இவர்களின் குணாதிசயம் எப்படி இருக்குமென்றால், இவர்கள் பலவிதமான கலாசாரத்தை விரும்புவார்கள், அதைப்பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். பல நாடுகளை சுற்றிப்பார்க்க விரும்புவார்கள், மனதைரியம் கொண்டவர்கள், அட்வென்ஜர் செய்ய விரும்புவார்கள். பல சாதனைகள் செய்பவர்கள் தான் இந்த காலமைப்பை கொண்டவர்கள்.
2.சுண்டை விரலில் இருந்து கட்டை விரல் வரை ஒன்றன்பின் ஒன்றாக உயர்ந்துக்கொண்டே போகும். ஏறுவரிசை அமைப்பைப்போல இருக்கும். இவர்களின் குணாதிசயம் எப்படியிருக்கும் என்றால், இவர்கள் எல்லோரிடமும் சகஜமாக பழகுவார்கள். எந்த பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் பேசுவார்கள். எல்லோருமே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், அன்புக்காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் இயற்கையை மிகவும் ரசிப்பார்கள், கலை உணர்வுடன் இருக்கக் கூடியவர்கள்.
3. கட்டை விரல் சின்னதாகவும் அடுத்த விரல் பெரிதாகவும் அதற்கு அடுத்த விரல் சின்னதாகவும் கடைசி இரண்டு விரல் சமமாகவும் இருந்தால், இவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரு கூட்டத்தில் இவர்கள் இருந்தால் மற்றவர்களை சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். இவர்கள் எப்போதுமே துருதுருவென்று இருப்பார்கள்.
4. கட்டைவிரலுக்கு அடுத்து உள்ள விரல் பெரிதாகவும் அடுத்த விரல்கள் இறங்கு வரிசையில் அமைந்திருக்கும். இது பார்ப்பதற்கு முக்கோணம் போல இருக்கும். இவர்களின் குணாதியத்தை பார்த்தால், இவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக வேலைகள் செய்வார்கள். அதனாலேயே சீக்கிரம் டையர்ட் ஆகிவிடுவார்கள். தன்னை முதன்மைப்படுத்தி மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வண்ணம் அனைத்து வேலைகளும் செய்வார்கள், தன்னை அனைவரும் கவனிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். இவர்களிடம் சிறப்பான பேச்சாற்றல் இருக்கும், கடினமான சமயங்களில் எடுக்க வேண்டிய முடிவுகளை மிகவும் துல்லியமாக எடுப்பார்கள்.
5.கட்டைவிரல் முதல் சுண்டை விரல் வரை சமமாக இருக்கும். சில சமயங்களில் கட்டை விரல் பெரிதாக இருக்கும். இவர்கள் குணாதிசயத்தை பார்த்தால், மிகவும் பொறுமைசாலியாக இருப்பார்கள், எதையும் யோசித்து முடிவெடுப்பவர்கள், கடுமையான சூழ்நிலையையும் எளிதாக கையாள்வார்கள், சிந்தித்து செயல்படக் கூடியவர்கள், நேர்மைக்கும், நீதிக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இந்த 5 கால்விரல்களில் உங்களுக்கு எந்த அமைப்பு பொருந்துகிறது என்று சொல்லுங்கள்.