நிறம் மாறும் 10 உயிரினங்கள் - ஆச்சரியம் அற்புதம்!

creatures that change color
creatures

எதிரிகள் மற்றும் ஆபத்துகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நிறம் மாறும் 10 உயிரினங்கள் பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.

1. Chameleon

chameleon
chameleon

இது தன் உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் நிறம் மாறுகிறது. இதன் உடம்பில் உள்ள Chromotaphores என்ற திசுக்கள், இதன் mood, வெளிச்சம் மற்றும் வெப்பத்திற்குத் தகுந்தாற் போல் நிறம் மாற்றுகின்றன.

2. Arctic Fox

Arctic Fox
Arctic Fox

இந்த இனம் கோடையில் ப்ரௌனாகவும், குளிர்காலத்தில் வெள்ளையாகவும் மாறுகிறது. இது இரைதேடுவதற்கும் மற்றும் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள இப்படி நிறம் மாறுகிறது.

3. Cuttle Fish

Cuttle Fish
Cuttle Fish

இது பச்சோந்திகளைவிட அதிகமாக நிறங்களை மாற்றக்கூடியது. இதன்மூலம் இரை தேடும் போது, எதிரிகளிடமிருந்தும் தன்னை காத்துக் கொள்கிறது.

4. Flounder

Flounder
Flounder

கடலில் வாழும் இனமான இது கடல் நிறத்திற்கும் தகுந்தாற்போல் நிறம் மாறுகிறது. சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் உடனடியாக நிறம் மாறக் கூடிய பண்பைப் பெற்றது.

5. Golden Tortoise Beetle

Golden tortoise Beetle
Golden tortoise Beetle

இது கோல்ட்பக் என்றும் அழைக்கப்படுகிறது. பளபளப்பான மஞ்சள் நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக மாறக்கூடியது. சூரிய வெளிச்சம் இதன் மெல்லிய ஓடு மீது படுவதாலும் நிறம் மாறுகிறது என அறியப்படுகிறது.

6. Mimic Octopus

Mimic Octopus
Mimic Octopus

இந்த இனம் lionfish மற்றும் sea snakes போன்று அடிக்கடி நிறம் மாறி ஆபத்துக்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்கிறது.

7. Pacific Tree Frog

Pacific tree frog
Pacific tree frog

இது பச்சை மற்றும் ப்ரௌன் நிறங்களில் மாறும் பண்பு உடையது. தன் எதிரிகளிடமிருந்து காக்க இப்படி நிறம் மாறுகிறது.

8. Peary Caribou

Peary Caribou
Peary Caribou

கனடாவில் காணப்படும் இது இதன் நிறத்தை ப்ரௌன் மற்றும் வெள்ளை நிறங்களில் மாற்றுகிறது. குளிர் காலங்களில் வெள்ளையாக மாறும் இது தன் முக்கிய எதிரியான ஓநாயிடமிருந்து தப்பிக்க நிறம் மாறுகிறது.

9. Indian Leaf Butterfly

Indian Leaf Butterfly
Indian Leaf Butterfly

இதன் இறக்கைகள் இலையை ஒத்து இருக்கும். இதன் ப்ரௌன் நிறத்தை இறகுகளால் மறைத்து இலையோடு இலையாக இருப்பதால் சட்டென்று அடையாளம் காண முடியாது.

10. Sea Horses

Sea Horses
Sea Horses
இதையும் படியுங்கள்:
உலகிலேயே மிகவும் ஆபத்தான சில உயிரினங்கள்!
creatures that change color

கடல் வாழ் இனமான இது, கடலின் பவழப்பாறை மற்றும் கடல்பாசியின் நிறத்தோடு ஒத்துப் போவதால் பெரி்ய மீன்களுக்கு இரையாக ஆகாமல் தப்பிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com