-மரிய சாரா
நம்மைச்சுற்றி இருக்கும் விலங்குகளில் பல சுவாரஸ்யங்கள் நிறைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு விலங்கு குழுக்களும் ஒவ்வொரு விதமானவை. மனித இனத்தைப்போலவே அவற்றிற்கும் சில தனித்துவ பண்புகளும், சிறப்புகளும் இருக்கின்றன.
ஆக்டோபஸ்கள் பொதுவாகவே புத்திசாலிகளாக அறியப்படுகின்றன. ஆக்டோபஸ்களுக்கு மூன்று இதயங்கள் இருக்கின்றன. அவற்றில் நீல ரத்தம் இருக்கும். குரோமடோபோர்கள் எனப்படும் உயிரணுக்களுக்குள் சிறிய நிறமி கொண்ட பைகளை சுருக்கி அல்லது விரிவாக்குவதன் மூலம், ஆக்டோபஸ் அதன் தோலின் நிறத்தை மாற்றி, சுற்றுச்சூழலுடன் ஒன்றும் திறனைக் கொண்டிருக்கிறது.
நீருக்கடியில் வேட்டையாடி உண்ணும் இந்தப் பிளாட்டிபஸ்கள் மிகவும் அசாதாரணமான பாலூட்டிகளாகும். இவை மற்ற பாலூட்டிகளைப்போல குட்டிகளை ஈனுவதில்லை மாறாக, முட்டையிடுகின்றன. இவற்றின் உடலில் இருக்கும் சுரப்பியானது அதன் இறையின் உடலில் இருந்து வெளியேறும் மின் சமிஞைகளை உணர்ந்து அவற்றை வேட்டையாட உதவுகிறது.
பூனை இனத்தைச் சேர்ந்த சிறுத்தைகள் பெரிய அளவிலான உருவம் கொண்டவை. நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடியவை. இவற்றின் வேகம் ஒரு ஸ்போர்ட்ஸ் காரின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு இருக்கும்
நீரில் வாழும் மிக அறிவாற்றல் வாய்ந்த பாலூட்டி இனம் இந்த டால்பின்கள். அதிக அறிவார்ந்த இவை விசில் போன்ற ஒளி எழுப்புவதன் மூலம் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்கின்றன. இவை 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் வரை உடல் நீளமும் 40 கிலோகிராம் முதல் 10 டன் வரை எடையும் கொண்டவை.
தேனீக்கள் பூச்சியினத்தைச் சேர்ந்த ஆறு கால்கள் கொண்ட பறக்கும் உயிரினங்களாகும். பூவிலிருந்து எடுத்து தேனை அவை கட்டும் தேன் கூட்டுக்குள் சேர்த்து வைக்கின்றன. தேனடை என்பது தேனீக்கள் பெருங்கூட்டமாகத் காட்டும் அறுகோண அறைகள் கொண்ட கூடு ஆகும்.
பார்ப்பதற்கு லார்வா போன்ற தோற்றத்தில் இருக்கும். காதுகளுக்கு அருகில் மீனிற்கு இருப்பதைப்போன்ற வெள்ளை நிற செவுள்களைக் கொண்டிருக்கும். இவை நன்னீரில் வாழக்கூடியவை. மெக்ஸிகோவில்தான் காணப்படுகின்றன. நகரமயமாக்கலின் விளைவாக இவை தற்போது அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கின்றன.
உருவத்தில் பெரியனவான யானைகள் அவற்றின் உடலால் மட்டுமல்ல, தும்பிக்கை, தந்தம் மற்றும் பெரிய காதுகளையும் கொண்டுள்ளன. இவற்றின் பெரிய காதுகள் கேட்கும் திறனுக்காக மட்டுமின்றி உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றன. யானைகள் புத்திக்கூர்மை மிக்கவை. இவற்றின் நீண்ட தும்பிக்கையானது மேல் உதடு மற்றும் மூக்கு உட்பட, 40000 தசைகளைக்கொண்ட நீண்ட பகுதியாகும்.
டார்டிகிரேடுகள், பெரும்பாலும் நீர் கரடிகள் (water bears) அல்லது பாசி பன்றிக்குட்டிகள் (moss piglets) என்று அழைக்கப்படுகின்றன. இவை உருவத்தில் மிக சிறிய நுண்ணுயிரிகள் என்பதால் இவற்றை microscope மூலமாகத்தான் பார்க்க முடியும். எட்டு கால்கள் இருந்தாலுமே மிக மிக மெதுவாகத்தான் இவற்றால் நகர முடியும். இவை பனி உரைத்தல் முதலிய கடினமான சூழலிலும் உயிர்வாழும் தன்மை பெற்றவை.