
ராஜ நாகம் 18 அடி நீளம் வளரக்கூடியது!
ஒரே கடியில் ஒரு யானையையோ, 20 மனிதர்களையோ கொல்லும் சக்தி வாய்ந்தது!
இதன் விஷம் ‘நியுரோ டாக்ஸின்’ (neoro toxin) என்றழைக்கப்படுகிறது. கடிக்கப்பட்ட விலங்குகளின் நரம்பு மண்டலத்தையும் தசைகளையும் உடனடியாகப் பாதிக்கும் விஷம் இது.
பாம்புகளையும் கூட உயிரோடு விழுங்கும் இது, பெரும் உணவை உட்கொண்டால் இரண்டு மாதங்கள் கூட வரை வேறெதையும் சாப்பிடாது.
பறவைகள் போல கூடு (nest) கட்டிய பிறகே, பெண் ராஜநாகங்கள் 20லிருந்து 50 முட்டைகள் வரை அந்தக் கூட்டில் இடுகின்றன.
தரையில் ஊரும் இவை, நன்றாக மரமேறவும், விரைவாக நீந்தவும் கூடியவை.
தேள்களில் சில வகை இருட்டில் மிளிரக் கூடியவை.
அவற்றின் கால்களில் உள்ள உணரிகள் (sensors) மூலம் அவை அதிர்வுகளை உணர்கின்றன.
எட்டு கால்கள் கொண்ட இவற்றின் வால் பகுதியில் கொடுக்கு அமைந்துள்ளது.
பாம்புகளைப் போல் சட்டை உரிக்கும் இவை அவற்றைப்போல சிறிய தேள்களை சாப்பிடுகின்றன.
பெண் தேள் அதன் குஞ்சுகளை அதன் முதுகிலேயே சுமக்கிறதாம்!
பகலில் ஓய்வெடுக்கும் இவை இருட்டியதும் வெளிக் கிளம்பி விடுமாம்.
சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் தேள்கள் சாப்பிடப்படுகின்றனவாம்! நூடுல்ஸ் மற்றும் ரைஸ், பீன்சுடன் சேர்த்துத் தின்று தீர்க்கிறார்களாம்!
அந்தக் காலத்தில் படைகளின் பல வியூகங்களில் ‘விருச்சிக வியூகம்’ என்ற ஒன்றும் உண்டு. தேளின் கொடுக்கு எல்லாத் திசைகளிலும் சுழன்று தாக்குவதைப் போல், விருச்சிக வியூகப் படைகளும் எல்லாப்பக்கங்களிலும் தாக்குமாம்!
திமிங்கலங்கள் 60 அடி நீளம் வளர்வதுடன் 50 டன் வரை எடை இருக்குமாம்!
திமிங்கிலங்களின் ரத்தம் மனித ரத்தத்தைப் போல சிவப்பு நிறம் கொண்டதாம்.
திமிங்கிலத்தின் துவாரமுள்ள தலை 20 அடி நீளம் உடையதாம்.
ஸ்பெர்ம் வேல் (sperm whale) என்றழைக்கப்படும் திமிங்கிலத்தின் தலையில் 6 லிருந்து 8 பாரல் (barrel) எண்ணெய் இருக்குமாம்.
கி.பி.,1690 ல்தான் முதன்முதலாக ஆயிலுக்காக திமிங்கிலம் கொல்லப்பட்டதாம். 1700 மற்றும் 1800 களில் அது தொடர்ந்ததாம்.
பால்கன்(falcon) என்றழைக்கப்படும் பருந்து மிக விரைவாகப் பறக்கக்கூடியதாம்.
அதிலும் இரைக்காக அது கீழிறங்கும்போது (dive) அதன் வேகம், அடேங்கப்பா… மணிக்கு 322 கி.மீட்டராம்! (200 மைல்கள்)
வேகமாக ஓடக்கூடிய சிறுத்தையின் வேகம் மணிக்கு 113 கி.மீ. (70 மைல்)
சைல் மீன் மணிக்கு 145 கி.மீ., (90 மைல்) வேகத்தில் நீந்துமாம்!
ஒலிம்பிக் போட்டிகளில் ஓடும் வீரர்களின் வேகம் மணிக்கு 43 கி.மீட்டராம்! (27 மைல்)