5000 டாலருக்கு ஒரு பேனாவா? பார்க்கர் பேனாவில் அப்படி என்ன சிறப்பு?

Parker pen
Parker pen
Published on

பார்க்கர் பேனாக்கள், என்றாலே அனைவரும் வாயடைத்துப் போவோம். அதற்குக் காரணம் அதன் விலையே. “இந்தப் பேனா ஏன் இவ்வளவு விலை?” தெரிந்துகொள்வோம்…

1. தரமான கைவினைத்திறன் மற்றும் பொருட்கள்:

பார்க்கர் நிறுவனத்தினர் பேனா உருவாக்கும் செயல்முறையை பல ஆண்டுகளாக மிக உன்னிப்பாக செய்துவருகிறார்கள். ‘நிப் முதல் அதன் எல்லா பாகங்களும், மிகக் கடுமையான தரச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதன் துருப்பிடிக்காத ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிப்’ அல்லது ஆடம்பரமான பொலிவுடைய மூடி என்று எதுவாக இருந்தாலும் அவற்றின் ஆயுள், பேனாவின் நீண்ட நாள் உழைப்பு மற்றும் ஜொலிஜொலிப்பு ஆகியவற்றை நினைவில் வைத்துதான் கவனமாக தயார் செய்கிறார்கள். ஒரு பார்க்கர் பேனாவை வைத்திருக்கும்போது, அதை நீங்கள் உபயோகிக்கும்போதும் ஒவ்வொரு முறையும் ஒரு புது உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் பார்க்கர் உற்பத்தியாளரின் நோக்கமே.

2. உயர்ந்த எழுத்து அனுபவம்:

ஒரு பார்க்கர் பேனாவைப் பயன்படுத்தும்போது உங்களால் காகிதத்தில் சிரமமின்றி பூப்போல எழுத முடியும். சரியான கச்சிதமான மையின் ஓட்டத்தை உங்களால் எழுதும் காகிதத்தில் பார்க்க முடியும். இதற்கு காரணம் ‘சமநிலையான அதன் முழு எடை மற்றும் நிப் வடிவமைப்பு ஆகியவையே’. நீங்கள் சிறு குறிப்புகளை எழுதினாலும் சரி, அல்லது முக்கியமான ஆவணங்களில் கையெழுத்து போடும்போதும் சரி, பார்க்கர் பேனா உபயோகித்தால், அது உங்கள் நம்பிக்கையைக் கூட்டும். மனதில் உறுதியை ஏற்படும்.

3. பிராண்ட் பிரஸ்டீஜ்:

பல தலைமுறைகள் தாண்டி, ஒரு மரியாதைக்குரிய பேனா உற்பத்தியாளராக பார்க்கர் நிறுவனம் இருப்பது கூடுதல் சிறப்பாகும். எழுத்தாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சேகரிப்பாளர்கள் இந்தப் பிராண்டின் வரலாற்றைத் தெரிந்துதான் அதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். பார்க்கர் பேனாவை சொந்தமாக வைத்திருப்பதைத் தங்கள் கவுரவத்தின் சின்னமாகப் பார்ப்பார்கள்.

4. எல்லா காலத்திற்கும் பொருந்தும் வடிவமைப்பு:

பார்க்கர் பேனாவின் தனிச்சிறப்பு எல்லா காலத்திற்கும் ஏற்ற அதன் வடிவமைப்பே. 15 வருட பழமையான பார்க்கர் பேனாவை இன்றைய நவீன பேனாவின் பக்கத்தில் வைத்தாலும் அதற்கு இணையாக அதன் பளபளப்பு தன்மை இருக்கும். அதன் வடிவமைப்பு எல்லா தலைமுறையினரும் விரும்பக்கூடிய வகையில் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
உலகில் மிகப்பெரிய தலைப்பாகையை அணிபவர் யார்?
Parker pen

5. நம் விருப்பத்திற்கேற்ற மாற்றங்கள்:

பார்க்கர் தனிப்பயனாக்குதல்(customization) விருப்பங்களை வழங்குகிறது. நீங்கள் பல்வேறு பாகங்கள், வண்ணங்கள் மற்றும் சில கூடுதல் சேர்க்கைகள் போன்றவற்றை நீங்களே தேர்வு செய்யலாம். இதனால் பார்க்கர் பேனாவை நீங்கள் உபயோகிக்கும்போது, ‘உங்களிடம் இருக்கும் இந்த பொருள் உலகில் வேறு யாரிடமும் இல்லை என்பதை ஒவ்வொரு நாளும் தனித்துவமாய் உணர்வீர்கள்.

6. வரையறுக்கப்பட்ட அரிதான பதிப்புகள்:

பார்க்கர் நிறுவனத்தார் எப்போதாவது வரையறுக்கப்பட்ட பதிப்புகளாக(Limited Editions) பேனாக்களை வெளியிடுவார்கள். இந்த அரிய பேனாக்கள் சிக்கலான வடிவமைப்புகள், விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் தனித்துவமான வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டிற்கு பார்க்கர் டியோஃபோல்ட் டக்ளஸ் மெக்ஆர்தர் லிமிடெட் எடிஷன்(Parker Duofold Douglas MacArthur Limited Edition). இதன் விலை சுமார் $5000 இருக்கும், தனித்துவமான பொருட்களைச் சேமித்து வைக்க நினைப்பவர்களுக்கென்றே என்று தனியாக விற்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com