பூனையும் குரைக்குமா? நாயைப் போல சத்தமிடும் விலங்குகள் பற்றி தெரியுமா?

நாய்களைப் போல குரைக்கும் விலங்குகள் உலகத்தில் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
குரைக்கும் விலங்குகள் | Animals
குரைக்கும் விலங்குகள் | AnimalsImage credit: Gemini AI
எம். ஆர். ஆனந்த்

I am a retired Bank officer. I have written articles in English for News Papers. I have written poems in English and Tamil 

Updated on

"நாய் மட்டும்தான் குரைக்கும்!" – இதுதான் நகர்ப்புறங்களில் வாழும் பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? நாயைப் போலக் குரைக்கும் மான்கள், மர உச்சியில் ஏறி எதிரியைப் பார்த்து மிரட்டும் குரங்குகள், ஆச்சரியமூட்டும் மணல் பூனைகள், ஏன்... மீன்கள் மற்றும் பல்லிகள் கூட குரைக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா?

குரைக்கும் விலங்குகள் பற்றி ஆச்சரியமான மற்றும் யாரும் அறிந்திராத ரகசியங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? வாருங்கள், இந்த விசித்திர உலகத்திற்குள் ஒரு சுவாரஸ்யமான பயணத்தைத் தொடங்குவோம்!

நகரத்தில் வசிக்கும் முக்கால்வாசி பேர்கள் நாய் மட்டும் தான் குறைக்கும் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். நானும் ஒரு காலத்தில் அப்படிதான் நினைத்து கொண்டிருந்தேன். அப்போது கூகிளா இருந்தது. ஏதோ படம் பார்த்து கதை சொல்லி கொண்டிருந்தோம்.

நாயைப் போல குரைக்கும் விலங்குகள்:

நாய்கள் தவிர சில பிராணிகள் குறைக்கவும் செய்கின்றன. நரிகள் "ஊ.. ஊ.." வென்று ஊளை இடுவது மட்டுமல்லாமல்,  "லொள்.. லொள்.." என்று குறைக்கவும் செய்கின்றன.

Barking deer என்று ஒருவகை மான்கள் உள்ளன. இவை புலி, சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளின் இருப்பை உணரும்போது, எச்சரிக்கை ஒலியாக நாய் குரைப்பதைப் போன்ற சத்தத்தை எழுப்ப ஆரம்பித்து விடும்.

பபூன் என்ற குரங்குகளும் எதிரியை பார்த்து விட்டால் அவ்வளவுதான். மரத்தின் உச்சி கிளைக்கு ஏறி குறைத்து தள்ளிவிடும். 

சீல் கடல் சிங்கங்கள் போன்ற கடல் பிராணிகள் குலைக்கின்றன. குறைப்பதன் மூலம் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றன.

இதையும் படியுங்கள்:
எறும்புகள் எப்படி வழி மாறாமல் வீடு திரும்புகின்றன தெரியுமா?
குரைக்கும் விலங்குகள் | Animals

தென் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட மிகச்சிறிய பாலைவனப் பல்லிகள் சொல்லுவதோடு மட்டுமல்லாமல் தொந்தரவு செய்யப்படும்போது சொடுக்கு மற்றும் குரைக்கும் ஒலிகளை எழுப்பும்.  

ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட ஒரு வகை ஆந்தைகள் கூட நாய் குரைப்பதைப் போன்ற ஒரு அலறலை  எழுப்புகின்றன. 

ஓநாய்கள் மற்றும் கொயோட்கள்: எச்சரிக்கைக்காகவோ அல்லது குழு ஒருங்கிணைப்புக்காகவோ அவ்வப்போது குறுகிய குரைப்புகளைப் பயன்படுத்துகின்றன. 

மீன்கள் கூட நாய் போன்ற குறைப்பு சத்தத்தை வெளிப்படுத்துகின்றன. உதாரணமாக கொலைகார பிராணாவை சொல்லலாம். அவை எழுப்பும் ஒலி நாய் குரைப்பதைப் போல இருப்பது ஆச்சரியமான விஷயம்.

இதையும் படியுங்கள்:
உலகை கலக்கிய சுட்டி எலி: மிக்கி மவுஸின் சுவாரஸ்ய வரலாறு!
குரைக்கும் விலங்குகள் | Animals

இவை எல்லாவற்றிற்கும் மேல் குறைக்கும் ஒருவகை பூனை உண்டு என்றால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள். ஆமாம், அதன் பெயர் SAND CAT அதாவது மணல் பூனை. மணல் பூனை என்பது பாலைவனத்தில் வசிக்கும் ஒரு சிறிய பூனை இனமாகும். இது ஒரு குட்டி  நாயைப் போன்ற உரத்த, கீச்சுக் குரலில் குரைக்கும். இவை பொதுவாக அமைதியாக இருக்கும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் துணையை அழைப்பது உள்ளிட்ட சில சூழல்களில், உரத்த, குறுகிய, கரகரப்பான ஒலிகளை எழுப்புகின்றன. அந்த ஒலி சில நேரங்களில் சிறிய நாய் குரைப்பதைப் போலக் கேட்கும். அதே சமயத்தில் அவை சாதாரண பூனைகளைப் போலவே 'மியாவ்' என ஒலியெழுப்பும்; சீறும். 

குரைக்கும் விலங்குகள் | Sand cat
குரைக்கும் விலங்குகள் | Sand catImage credit: Gemini AI

கடைசியாக நாயை போல குறைக்கும் மனிதர்களும் உண்டு. நான் சொல்வது என்ன என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். 

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், வாசகர்களாகிய குழந்தைகள், நாயைப் போல குரைக்கும் விலங்குகள், விலங்குகளின் அறியப்படாத குரல்வழிகள் மற்றும் தகவல் தொடர்பு முறைகள் குறித்த ஆச்சரியமூட்டும் அறிவைப் பெற்று, இயற்கையின் மீதான பார்வையினை முழுமையாக மாற்றிக்கொள்ள முடியும். மேலும், இயற்கையின் மீது ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com